மகத நாடு

மகத நாடு அல்லது மகதம் பழைய சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்படும் 16 மகாஜனபத நாடுளில் ஒன்றாகும். இதன் முதன்மை நிலப்பகுதி கங்கை ஆற்றுக்குத் தெற்கே அமைந்துள்ள பீகாரின் பகுதி ஆகும். இதன் தலைநகரம் ராஜகிரகம் என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகாரின் பெரும்பகுதி, வங்காளம், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.

மகத நாடு
मगध राज्यशासन
[[வேத காலம்|]]
கி மு 1200–கி மு 322 [[மௌரியர்|]]
மகதப் பேரரசு அமைவிடம்
கிமு 5 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டின் அண்ணளவான பரப்பு
தலைநகரம் ராஜகிரகம், பின்னர் பாடலிபுத்திரம்
மொழி(கள்) பிராகிருதம், சமசுகிருதம்
சமயம் சமணம்
பௌத்தம்
இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் பண்டைய இந்திய வரலாறு
 - உருவாக்கம் கி மு 1200
 - குலைவு கி மு 322
நாணயம் பணம்
தற்போதைய பகுதிகள்  இந்தியா
 வங்காளதேசம்
 பாக்கித்தான்
 ஆப்கானித்தான்
 நேபாளம்
மகாஜனபத நாடுகளில் ஒன்றான மகத நாடு

புராண - இதிகாச குறிப்புகள்

பாகவத புராணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களில், மகத நாட்டின் மன்னர்களில் புகழ் பெற்றவரும், சக்தி வாய்ந்தவருமான ஜராசந்தனைக் குறிக்கிறது. மதுராவின் மன்னரும், தனது மருமகனுமாகிய கம்சனைக் கொன்ற கிருட்டிணன் மீது தீராத பகை கொண்டவன். தருமரின் இராசசூய வேள்விக்கு முன்னர், கிருஷ்ணர், பீமன் மற்றும் அருச்சுனன் உதவியுடன் ஜராசந்தனை மற்போரில் கொன்று, அவனது சிறையில் அடைப்பட்டு இருந்த எண்பத்தாறு மன்னர்களையும்; இளவரசர்களையும் மீட்டனர்.[1]

வரலாறு

இந்தியாவின் பெரிய சமயங்களான பௌத்தம் மற்றும் சமணம் மகத நாட்டிலேயே உருவாயின. இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு பேரரசுகளான மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு ஆகியவற்றின் மூலமும் இதுவே. இப் பேரரசுகளின் காலத்திலேயே இந்தியா அறிவியல், கணிதம், வானியல், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டது. இது இந்தியாவின் பொற்காலம் எனக் கருதப்படுகின்றது.[2]

மகத நாட்டு ஆட்சியாளர்கள்

ஹரியங்கா வம்சம் (கி மு 600 – 413 )

சிசுநாக வம்சம் (கி மு 413–345 )

  • சிசுநாகன் (கி மு 413–395)
  • காகவர்ண காலசோகா (கி மு 395–367 )
  • மகாநந்தன் (கி மு 367–345 )

நந்த வம்சம் (கி மு 345–321 )

நந்தப் பேரரசின் உச்சக் கட்டத்தில் அதன் ஆட்சிப் பகுதிகளைக் காட்டும் படம். தன நந்தன் காலம். கிமு 323.

மௌரியர் வம்சம் கி மு 322–185

மௌரியப் பேரரசு

குப்த வம்சம் (கி பி 240–கி பி 600)

குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்: முதலாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (இளம்பச்சை நிறம்-வடக்கு), சமுத்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (செம்மண் நிறம்-நடுப்பகுதி), இரண்டாம் சந்திரகுப்தர் விரிவாக்கம் செய்த பகுதிகள் (பச்சை நிறம்-மேற்கு)
  1. ஸ்ரீகுப்தர்
  2. கடோற்கசன்
  3. சமுத்திரகுப்தர்
  4. இராமகுப்தர்
  5. இரண்டாம் சந்திரகுப்தர் என்ற விக்கிரமாதித்தியன்
  6. முதலாம் குமாரகுப்தன்
  7. ஸ்கந்தகுப்தர்
  8. இரண்டாம் குமாரகுப்தர்
  9. புருகுப்தர்
  10. நரசிம்மகுப்தர்
  11. மூன்றாம் குமாரகுப்தர்
  12. விஷ்ணுகுப்தர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. எண்பத்தாறு மன்னர்கள் சிறையில்! - சபாபர்வம் பகுதி 15
  2. Magadha
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.