பிராகிருதம்
பிராகிருதம் அல்லது பாகதம் (பாளி: प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல. ஒரு மொழிக்குடும்பத்தை குறிக்கின்றது. சங்கதத்தையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர்.[1] இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், அந்தணர்கள் அதை வடமொழிக்கு புறம்பாகவே கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தன.
பிராகிருதம் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
— |
மொழி வகைப்பாடு: | *இந்திய-ஐரோப்பிய * இந்திய-ஈரானிய
|
துணைப்பிரிவு: |
—
|
ISO 639-2 and 639-5: | pra |



பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் பேசப்பட்டு வந்தது. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தில் இருந்தே தோன்றின.
சொற்பிறப்பியல்
பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி, பகதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது ஆகும். பிரகிருதி, பகதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் . மாறாக சமஸ்கிருதம், சாங்கதம் (संस्कृतं) என்றால் 'நன்றாக செய்யப்பட்டது' எனப் பொருள்.
பிராகிருத மொழிகள்
பல பிராகிருத மொழிகள் உள்ளன. அவற்றுள் பலதரப்பட்ட இலக்கிய மரபுடையன மூன்று. அவை சௌரசேனி, மகதி, மஹாராட்டிரி. சமண பிராகிருதத்தையும் இத்தோடு சேர்த்துக்கொள்ளலாம். பைஸாகி, காந்தாரி என்ற பிராகிருத மொழிகளும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. அர்த்தமகதி என்ற மொழி சமண நூல்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட பிராகிருத மொழியாகும்.
புத்தர் கூட ஒரு பிராகிருத மொழியிலேயே தனது போதனைகளை செய்தார். பாளி மொழியும் ஒரு பிராகிருத மொழியே. பெரும்பான்மையான தேரவாத புத்த மத நூல்களும் சூத்திரங்களும் பாளி மொழிலேயே உள்ளன. அசோகரின் கல்வெட்டுகளும் இம்மொழிலேயே உள்ளது. எனினும் பல்வேறு இனபேத காரணங்களுக்காக வடமொழி நூலாசிரியர்கள் பாளியை ஒரு பிராகிருத மொழியாக கருதவில்லை. தற்காலத்தில் அது பிராகிருத மொழியாகவே கருதப்படுகிறது . பெரும்பான்மையான தற்கால வட-இந்திய மொழிகள் பிராகிருத்தில் இருந்து தோன்றிய அபப்ரம்சா என்ற இடைக்கால மொழியிலிருந்தே தோன்றின.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை