கௌடப் பேரரசு

கௌடப் பேரரசு (Gauda Kingdom) (வங்காள: গৌড় রাজ্য Gāur Rājya ), (ஆட்சி: கி. பி 590 - 626), தற்கால பிகார் மாநிலத்தின் முர்சிதாபாத் நகரை தலைநகராகக் கொண்டு தற்கால பிகாரின் பகுதிகள், வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் பகுதிகளை கி. பி 590 முதல் 626 முடிய ஆண்டது. கௌடப் பேரரசர்களில் தலைசிறந்தவர் சசாங்கன் ஆவர்.[1][2]. கௌடப் பேரரசின் தலைநகரம் கர்ணசுபர்னா என்ற தற்கால முர்சிதாபாத்த்தின் தலைமையிட நகரமான பெர்ஹாம்பூர் நகரம் ஆகும். [3] சீன யாத்திரிகனும் பௌத்த அறிஞருமான யுவான் சுவாங் சசாங்கன் ஆண்ட கௌடப் பேரரசின் கர்ணசுபர்னா பகுதிக்கு சென்று வந்தவர்.[2].[4]

கௌடப் பேரரசு
வங்காள: গৌড় রাজ্য (Gāur Rājya)
590–626
தலைநகரம் கர்ணசுபர்னா
சமயம் இந்து சமயம், பௌத்தம்
அரசாங்கம் முடியாட்சி
அதிபர்
 -  590–625 சசாங்கன்
 - 625–626 மானவ அரசன்
வரலாறு
 - உருவாக்கம் 590
 - குலைவு 626

அத்வைத மரபைச் சார்ந்த கௌடபாதர் இப்பேரரசிலிருந்து, வாரணாசிக்கு சென்று, கோவிந்த பகவத் பாதர்க்கு அத்வைத தத்துவத்தை போதித்தவர்.

சசாங்கனின் இறப்பிற்கு பின்னர் கௌடப் பேரரசு, ஷாசாங்கனின் மகன்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர்.

பாலப் பேரரசர்கள், சென் பேரரசர்கள் தங்களை கௌட தேசத்தின் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, first published 1971, reprint 2005, pp. 5-6, Tulshi Prakashani, Kolkata, ISBN 81-89118-01-3.
  2. Ghosh, Suchandra. "Gauda". Banglapedia. Asiatic Society of Bangladesh. பார்த்த நாள் 2009-08-22.
  3. Gauda Kingdom of Bengal
  4. Bandopadhyay, Rakhaldas, Bangalar Itihas, (வங்காள மொழியில்), first published 1928, revised edition 1971, vol I, p 101, Nababharat Publishers, 72 Mahatma Gandhi Road, Kolkata.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.