பத்மாவதி நாகர்கள்

பத்மாவதி நாகர்கள் (Nagas of Padmavati) (இந்தி|नाग) (210 – 340 CE) பண்டைய மத்திய இந்தியாவில், விதிசா, பத்மாவதி, கந்திப்பூர் மற்றும் மதுரா போன்ற நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு கி. பி 210 முதல் 340 முடிய 130 ஆண்டுகள் நாடாண்ட அரச குலங்களாகும்.[1]பத்மாவதி நாகர் குலத்தினர் வாகடகப் பேரரசின் கூட்டாளிகள் ஆவார்.

வரலாறு

நாகர் அரசுகள் காலத்தில் அவர்கள் வெளியிட்ட நாணயங்கள் மூலம் நாகர் குலத்தைப் பற்றி அறிய முடிகிறது. [2][3]வாகாடகப் பேரரசு காலத்திய கல்வெட்டுகளில், வாகாடகப் பேரரசன் முதலாம் ருத்திரசேனன், பவ நாகனின் மகள் வழி பேரன் எனக் குறிப்பிட்டுள்ளது.[4]சமுத்திர குப்தரின் அசோகரின் அலகாபாத் தூண்களில் கணபதி நாகனை குறித்துள்ளது. [5]பத்மாவதி நாகரான நாகசேனன் குறித்து, பாணபட்டர் எழுதிய ஹர்சரின் வரலாறு என்ற நூல் மூலம் அறிய முடிகிறது.[6]

பத்மாவதி நாக குல அரசர்கள்

  1. பீமா நாகன் கி. பி 210-231
  2. ஸ்கந்த நாகன் 231-245
  3. வசு நாகன் 245-260
  4. பிரகஸ்பதி நாகன் 260-275
  5. இரவி நாகன் 275-290
  6. பிரபாகர நாகன் 290-305
  7. பவ நாகன் 305-320
  8. தேவ நாகன் 320-335
  9. கணபதி நாகன் 335-340

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Vakataka gupta age: circa 200-550,Ramesh Chandra Majumdar, Anant Sadashiv Altekar 1986,Page 36
  2. H V Trivedi: Catalogue of the Coins of the Naga Kings of Padmavati, published by The Department of Archaeology & Museums, Madhya Pradesh, Gwalior, 1957
  3. Indian Numismatic Studies, K. D. Bajpai, 2004, Page 16
  4. Vakataka gupta age: circa 200-550, Ramesh Chandra Majumdar, Anant Sadashiv Altekar, Motilal Banarsidass Publ., Feb 1, 1986
  5. History of Ancient India: Earliest Times to 1000 A. D. By Radhey Shyam Chaurasia, Atlantic Publishers & Dist, Jan 1, 2002, p. 159
  6. Rise And Fall Of The Imperial Guptas By Ashvini Agrawal, Motilal Banarsidass Publ., Jan 1, 1989, p. 54

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.