கோழிக்கோடு நாடு


சாமூத்திரி அல்லது சமோரின் (Samoothiri - Zamorin) (மலையாளம்: സാമൂതിരി), இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தென்னிந்தியாவின் முக்கிய வணிகத் தலமாக விளங்கியது.[1]

கோழிக்கோடு சாமூத்திரிகள்
കോഴിക്കോട് സാമൂതിരി
முடியாட்சி

12-ஆம் நூற்றாண்டு–1806
கோழிக்கோடு நாடு அமைவிடம்
கோழிக்கோடு துறைமுகம், ஓவியம்; ஆண்டு 1572
தலைநகரம் கோழிக்கோடு
மொழி(கள்) மலையாளம், சமஸ்கிருதம்
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் நிலப்பிரபுத்துவம், முடியாட்சி
கோழிக்கோட்டின் சாமூத்திரிமானவிக்கிரமன்
வரலாறு
 - பிற்கால சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின் 12-ஆம் நூற்றாண்டு
 - பிரித்தானிய இந்திய அரசால் ஜமீந்தார் நிலை. 1806
நாணயம் கோழிக்கோடு பணம்
கோழிக்கோடு சாமூத்திரிய மன்னரின் அரசவை ஓவியம், ஆண்டு 1898

நறுமணப் பொருட்களைத் தேடி 1498-இல் இந்தியாவின் கோழிக்கோட்டிற்கு வந்த முதல் ஐரோப்பியர், போர்ச்சுக்கல் நாட்டின் வணிகரும், மாலுமியுமான வாஸ்கோ ட காமா ஆவார்.

நாட்டின் பரப்புகள்

சாமூத்திரி நாட்டின் வரைபடம்

சாமூத்திரியர்கள் ஆண்ட கோழிக்கோடு நாட்டின் பகுதிகளாக குறும்பரநாடு, பையநாடு, ஏறநாடு, பொன்னானி, சேரநாடு, வெங்கிட்டா கோட்டை, மலப்புறம், கப்புல், மண்ணார்க்காடு, கரிம்புழா, நெடுங்காடு, கொல்லங்கோடு, கோட்டுவாயூர் இருந்தன.

துறைமுகங்கள்

புதுப்பட்டினம், கொல்லம், கோழிக்கோடு, பொன்னானி சாமூத்திரிகளின் முக்கிய துறைமுகங்கள் ஆகும்.

வரலாறு

கோழிக்கோடு அரசு கி பி 826-இல் நெடுயிரிப்பு சுவரூபம் எனும் பெயரில் நிறுவப்பட்டது. கோழிக்கோடு நகரம் 1026 நிறுவப்பட்டது. 1766 - 1792-ஆம் ஆண்டுகளுக்கிடையே கோழிக்கோடு அரசு மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் கோழிக்கோடு அரசை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்

  1. "Zamorin". Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc., 2012. Web. 6 May. 2012 <http://www.britannica.com/EBchecked/topic/655668/Zamorin>
  2. Princely states of India
  • ^ Schwartz, Stuart.Implicit Understandings, Cambridge University Press, Cambridge, 665pp, 1994, 302. ISBN 0-521-45880-3
  • Hamilton, Alex. A new Account of the East Indies, Pinkerton's Voyages and Travels, viii. 374
  • Hart, Henry H. The Sea Road to the Indies. New York:MacMillan Company, 1950.
  • Danvers, Frederick Charles. The Portuguese in India. New York:Octagon Books, 1966.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.