இந்தியவியல்

இந்தியயியல் (Indology) இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு, மதம், சமூகவியல், வரலாறு ஆகியவற்றை ஆராயும் அறிவுத்துறை. இது ஒரு சிறப்புப்பெயரோ ஒழிய ஒரு தனி அறிவுத்துறை அல்ல.

உள்ளடக்கம்

இந்தியவியலின் உள்ளே இந்திய, பாகிஸ்தான், வங்காளம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைப்பற்றிய ஆய்வுகளும் அடங்கும். பொதுவாக ஆரம்பகால ஜெர்மானிய அறிஞர்களைச் சுட்டவே இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இப்பெயர் பொதுவாக கையாளப்படுவதில்லை. பதிலுக்கு தெற்காசிய ஆய்வுகள் என்ற சொல்லே புழக்கத்திலுள்ளது

வரலாறு

இந்தியயியல் இந்தியாவைப்பற்றி எழுதிய தொன்மையான பயணிகளின் குறிப்பில் இருந்தே தொடங்குகிறது. மெகஸ்தனிஸ் [கிமு 350–290 ] முதல் இந்தியவியலாளர் எனப்படுகிறார். ஆனால் பொதுவாக இந்தியாவைப்பற்றி எழுதிய ஐரோப்பியர்களையே இந்த வரிசை சுட்டுகிறது

நவீன இந்தியயியலின் தொடக்கப்புள்ளிகள் ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக் (Henry Thomas Colebrooke), வில்லியம் ஷெல்கெல் (August Wilhelm Schlegel) போன்றவர்கள். 1822ல் உருவான ஆசியவியல் கழகம் (The Société Asiatique) இந்தியயியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தது. வேந்திய ஆசியயியல் கழகம் (Royal Asiatic Society) 1824 ல் உருவானது. ஜெர்மன் கீழையியல் கழகம் (German Oriental Society) 1845ல் உருவாயிற்று . இவை இந்தியயியல் ஆய்வை மேலெடுத்தன

இந்தியயியல் ஆய்வுகளில் பெரிய ஊக்கத்தை அளித்தது சம்ஸ்கிருத நூல்களின் மொழியாக்கமாகும். மாக்ஸ் முல்லரை தொகுப்பாசிரியாகக் கொண்டு 1879ல் ஆரம்பித்த கீழைநாட்டு புனித நூல்கள் மொழிபெயர்ப்பு வரிசை இந்தியவியல் ஆய்வுகளில் பெரிய முன்னேற்றமாக அமைந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.