இராஜஸ்தான் வரலாறு

இராஜஸ்தான் வரலாறு மேற்கு இந்தியாவில், பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்புறத்தில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதிகளை, துவக்ககால இசுலாமிய ஆட்சியில் கூர்ஜரம் அல்லது குஜ்ஜர்களின் நாடு எனப்பட்டது.[1]

மேவார் மன்னர் இரானா பிரதாப் சிங்

பண்டைய வரலாறு

இராஜஸ்தானின் சீகர் மற்றும் சுன்சுனூ மாவட்டங்கள் வேத கால பிரம்மவர்த்தம் எனும் பகுதியில் விளங்கியதாகும். சரஸ்வதி ஆறு அரியானாவின் குருச்சேத்திரம் வழியாக பாய்ந்து இராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் மறைகிறது.

ஹரப்பா காலத்திய சிந்துவெளி நாகரீகத்தின் எச்சங்கள் வடமேற்கு இராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் காளிபங்கான் எனுமிடத்தில் 1998ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி மு 321 – 184 முடிய, இராஜஸ்தான் பகுதி, மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது.

மத்திய கால வரலாறு

1191இல் முதல் தாரைன் போரில், இராஜபுத்திர மன்னர் பிருத்திவிராச் சௌகான், கோரி முகமதுவை வென்றார். ஆனால் 1192இல் நடந்த இரண்டாம் தாரைன் போரில் பிரித்திவிராச் சௌகானை, கோரி முகமது வென்றார்.

1200இல் இராஜஸ்தானின் நாகௌர், அஜ்மீர் மற்றும் இரந்தம்பூர் பகுதிகள் தில்லி சுல்தான்களின் ஆட்சியில் இருந்தது.

13ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், மேவார் இராசபுத்திர மன்னர் இராணா சங்கா பாபரை எதிர்த்து கண்வா எனுமிடத்தில் போர் புரிந்தார். அக்பர், ஆம்பர் இராசபுத்திர அரச குலப் பெண் ஜோத்தாபாய்யை மணந்து, இராசபுத்திர – முகலாயர்களின் ஒற்றுமைக்கு வித்திட்டார். ஆனால் மேவார் மன்னர் உதய் சிங், அக்பரின் மேலாண்மையை ஏற்கவில்லை. எனவே அக்பர் சித்தோர்கார் கோட்டையைத் தகர்த்து கொண்டு உள்ளே சென்று பார்க்கையில், கோட்டைக்குள் இருந்த இராசபுத்திர குலப் பெண்கள் கூட்டுத் தீக்குளிப்பு செய்து கொண்டு கருகியதை கண்டு மனம் வெதும்பினார். உதய் சிங்கின் மகன் இரானா பிரதாப் முகலாயப் பேரரசைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் எதிர்த்து வந்தார்.

சிதிலமடைந்த ஜெய்சல்மேர் கோட்டை, இராஜஸ்தான்

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளும், அதனுள் கலைநயத்துடன் கட்டப்பட்ட அரண்மனைகளும், சமணர் கோயில்களும், துர்கை கோயில்களும் இந்தியக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

மராத்தியப் பேரரசு

1700களில் துவக்கத்தில் பேஷ்வாக்களான, ஹோல்கர்கள் மற்றும் சிந்தியாக்கள் தலைமையிலான மராத்தியப் பேரரசு வடக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இராஜஸ்தானின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசில் இணைக்கப்பட்டது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர் மராத்தியர்களை வெல்லும் வரை, இராஜஸ்தான் மராத்தியப் பேரரசில் இருந்தது.[2]

ஆங்கிலேயர்களின் ஆட்சியில்

பிரிட்டிஷ் ராஜ் ஆட்சியில், இராஜஸ்தான் பகுதிகள், இராஜபுதனா முகமை என அழைக்கப்பட்டது. அல்வர், பன்ஸ்வரா, பரத்பூர், புந்தி, தோல்பூர், துங்கர்பூர், ஜெய்ப்பூர், ஜெய்சல்மேர், ஜாலவர், ஜோத்பூர், கரௌலி, கிஷன்கர், கோட்டா, குஷால்கர், லாவா, மேவார், படான், பிரதாப்கர், சக்புரா, டோங்க் மற்றும் சிரொஹி பகுதிகளை இராஜபுத்திர குலத்தினர், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ், சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆண்டனர்.

இந்திய விடுதலைக்கு பின்னர்

இந்தியப் பிரிவினைக்கு பின்னர் 1948 முதல் 1950 முடிய இராஜஸ்தானின் சமஸ்தானங்கள் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. மேலும் இந்திய அரசுடன் இணைந்த சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு ஆண்டுதோறும் மன்னர் மானியம் இந்திய அரசால் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் மன்னர் மானியம் வழங்குவதை இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1971இல் நிறுத்தப்பட்டது.

3 மார்ச் 1951இல் நடைபெற்ற இராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில், இராஜஸ்தான் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக டிக்கா ராம் பலிவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Notes

    Citations

    1. Ramesh Chandra Majumdar (1994) [1952]. Ancient India. Motilal Banarsidass. பக். 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0436-4. https://books.google.com/books?id=XNxiN5tzKOgC&pg=PA263.
    2. Naravane, M. S.. The Rajputs of Rajputana: A Glimpse of Medieval Rajasthan. https://books.google.com/books?id=lF0FvjG3GWEC&pg=PA70. பார்த்த நாள்: 16 March 2014.

    Bibliography

    மேல் வாசிப்பிற்கு

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.