அரியானா

அரியானா (இந்தி : हरियाणा, பஞ்சாபி: ਹਰਿਆਣਾ, IPA: [hərɪjaːɳaː]) ஒரு வட இந்திய மாநிலம். அரியானா என்ற சொல் (ஹரி – இந்து கடவுள்) “கடவுளின் வசிப்பிடம்” என்று பொருள்படும். அரியானா 1966ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தனது எல்லைகளாக வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் கொண்டுள்ளது. அரியானா மாநிலம், டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியானாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரியானாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரியானா
மாநிலம்

இந்திய வரைபடத்தில் உள்ள அரியானா மாநிலம்
நாடு இந்தியா
பகுதிபஞ்சாப் பகுதி
உருவாக்கம்1 நவம்பர் 1966 (1966-11-01)
தலைநகரம்சண்டிகர்††
பெரிய நகரம்பரிதாபாது
மாவட்டம்21
அரசு
  ஆளுநர்சத்யதேவ் நாராயன் ஆர்யா
  முதலமைச்சர்மனோகர் லால் கட்டார் (பாஜக)
  சட்டவாக்க அவைஓரவை முறைமை (90 தொகுதி)
  நாடாளுமன்றத் தொகுதிகள்மாநிலங்களவை 5
மக்களவை (இந்தியா) 10
  உயர் நீதிமன்றம்பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பரப்பளவு[1]
  மொத்தம்44,212
பரப்பளவு தரவரிசை21வது
மக்கள்தொகை (2011)
  மொத்தம்2,53,53,081
  தரவரிசை18வது
  அடர்த்தி573
  அடர்த்தி தரவரிசை11
மொழிகள்
  ஆட்சி மொழி(s)இந்தி, பஞ்சாபி[2][3]
நேர வலயம்IST (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-HR
வாகனப் பதிவுHR-xx
HDI 0.644 (medium)
HDI17வது (2011)
எழுத்தறிவு76.6%
பாலின விகிதம் 903 (டிசம்பர் 2015 வரை)[4]
Life expectancy66.2
இணையதளம்www.haryana.gov.in
It was carved out from the State of Punjab by the Punjab (Reorganisation) Act, 1966
^†† Joint Capital with Punjab, India
சின்னங்கள்
மொழிஅரியான்வி
விலங்குபுல்வாய்
பறவைBlack francolin
மலர்தாமரை
மரம்அரச மரம்

அரியானாவில் தனிநபர் வருமானம் ரூ 29,887 என்ற அளவில் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.[5] அரியானா ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக வளர்ந்து வருகிறது. குர்காவன் நகரம் தகவல் தொழில்நுட்பம் வண்டி உற்பத்தியிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வண்டி தயாரிப்பாளரான மாருதி உத்யோக் நிறுவனம், குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர மோட்டார் வண்டி தயாரிப்பாளரான ஹிரோ ஹோண்டா நிறுவனமும் குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பானிபட், பஞ்சகுலா, பரிதாபாத் ஆகியனவும் முக்கிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நகரங்கள். பானிபட் நகரத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகறிப்பாலை தெற்கு ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டங்கள்

மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக அரியானா மாநிலத்தை நான்கு கோட்டங்களாகவும், இருபத்து ஒன்று மாவட்டங்களாகவும் பிரித்துள்ளனர். அரியானா மாநில கோட்டங்கள், மாவட்டங்கள் விவரம்;

கோட்டங்கள்மாவட்டங்கள்
அம்பாலா கோட்டம்அம்பாலா மாவட்டம், கைத்தல் மாவட்டம், குருச்சேத்திர மாவட்டம், பஞ்சகுலா மாவட்டம் மற்றும் யமுனாநகர் மாவட்டம்
குர்கான் கோட்டம்பரிதாபாத் மாவட்டம், பல்வல் மாவட்டம், குர்கான் மாவட்டம், மகேந்திரகர் மாவட்டம், மேவாத் மாவட்டம் மற்றும் ரேவாரி மாவட்டம்
ஹிசார் கோட்டம்பிவானி மாவட்டம், பதேகாபாத் மாவட்டம், ஜிந்த் மாவட்டம், ஹிசார் மாவட்டம் மற்றும் சிர்சா மாவட்டம்
ரோதக் கோட்டம்சஜ்ஜர் மாவட்டம், கர்னால் மாவட்டம், பானிபட் மாவட்டம், ரோத்தக் மாவட்டம் மற்றும் சோனிபத் மாவட்டம்

புவியியல்

மோர்னி குன்றுகள, அரியானா

44,212 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட அரியானா நான்கு திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட வட இந்திய மாநிலம். இது அட்சரேகை 27°37' இருந்து 30°35' வரை வடக்கிலும், தீர்க்க ரேகை 74°28' இருந்து 77°36' வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. அரியானா கடல் மட்டத்தில் இருந்து 700 அடியிலிருந்து 3600 அடிவரை உயரத்தில் அமைந்துள்ளது. காடுகள் சுமார் 1,553 சதுர கிலோமீட்டர்களை கொண்டுள்ளன. அரியானாவின் நான்கு முக்கிய புவியியல் அம்சங்களாவன:

அரியானாவின் ஆறுகள் : யமுனை ஆறு அரியானாவின் கிழக்கு எல்லையில் பாய்கிறது. பண்டைய இதிகாசஙகளில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி ஆறு அரியானாவின் ஊடே பாய்ந்ததாக நம்பப்படுகிறது. அரியானாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான காகர் ஆறு, பருவகால ஆறு. இது, இமய மலையில் தோன்றி, யமுனை மற்றும் சட்லஜ் ஆறுகளுகிடையான சமவெளியில் பாய்ந்து, அரியானாவின், பஞ்சகுலா என்ற இடத்தில் நுழைந்து, அம்பாலா, ஹிசார் போன்ற பகுதிகளை வளப்படுத்தி, பய்கன்னர் என்னும் இடத்தில், ராஜஸ்தான் பாலைவனத்தில் நுழைகிறது. அரியானாவின் மற்ற முக்கிய ஆறுகளாக கருதப்படுபவன: மார்கண்டா, தன்கரி, மற்றும் ஸாகிபி.[6]

காலநிலை

அரியானாவின் காலநிலை மற்ற வட இந்திய மாநிலங்களின் காலநிலையை ஒத்துள்ளது. காலநிலை, கோடைகாலத்தில், மிக வெப்பமாகவும் (கூடியபட்சம் 50 டிகிரி செல்சியஸ் வரை), குளிர் காலத்தில் மிகக் குளிர்ச்சியாகவும் (குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியஸ் வரை) காணப்டுகிறது. மே மற்றும் ஜுன் மாதங்கள் வெப்பமானதாகவும், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிரான பதிவு செய்ய பட்டுள்ளன. பொதுவாக மழைகாலங்களை கணிக்க இயலாவிடினும், 80 விழுக்காடு மழை காலமழையின் (ஜூலை –செப்டம்பர்) மூலமே பெறப்படுகிறது.

அரியானாவின் தாவர மற்றும் விலங்கு வளங்கள்

முள்செறிந்த , வரண்ட, முட்புதர்கள் மாநிலம் எங்கும் காண்ப்படுகின்றன. பருவ மழைகாலங்களில், புல்வெளிகள் உருவாகின்றன. மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகள், காலமழையை சார்ந்து இருப்பன. மல்பெரி, யூக்காலிப்டஸ், தேவதாரு, பாபுல் போன்ற மரங்களை பொதுவாக எங்கும் காணலாம். அரியானா மாநிலத்தில் காணப்படும் விலங்கினகளாவன: கலைமான், சிறுத்தை, நரி, மங்கூஸ், ஓநாய் மற்றும் காட்டுநாய்.

பொருளாதாரம்

கிராமபுர பொருளாதாரம் வேளாண்மை சார்ந்ததாகவே இருந்து வருகிறது. குர்கான் நகரத்தில் தொழிற்சாலைகள் பெருகியதால் உண்டான பொருளாதர வளர்ச்சியினால், பல மாநிலங்களிலிருந்து மக்கள் அரியானாவுக்கு குடிபெயர்ந்து வருதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பீகார் , மேற்கு வங்கம் , நேபாளம் ஆகியன இதில் முதன்மை பெறுகின்றன.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அரியானா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 25,351,462 ஆக உள்ளது. நகர்புறங்களில் 34.88% மக்களும், கிராமப்புறங்களில் 65.12% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.90% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 573 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 75.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.06 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 65.94 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,380,721 ஆக உள்ளது. [7]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 22,171,128 (87.46 %)ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 1,781,342 (7.03 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 50,353 (0.20 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,243,752 (4.91 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 52,613 (0.21 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,514 (0.03 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,548 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 42,212 (0.17 %) ஆகவும் உள்ளது.

மொழி

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், அரியானாவின் வட்டார பேச்சு மொழியான அரியான்வி மற்றும் பஞ்சாபி, உருது பேசப்படுகிறது. . ஆனால் இதற்கு அரசாங்க அங்கிகாரம் இல்லை. இது இந்தியின் வட்டார பேச்சு மொழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் பெரும்பாலான சொற்கள் ராஜஸ்தானி மொழியின் ஒரு கிளை மொழியான பாக்ரி மொழியை ஒத்து உள்ளது. அரியானாவாதியின் சில சொற்கள் இந்தியின் அதிகாரபூர்வமான கிளைமொழியான கரிபோலியை ஒத்து இருந்தாலும் பெரும்பாலானாவை வேறுபட்டவை.

முதலில் தமிழுக்கு இரண்டாம் மொழி தகுதி வழங்கப்பட்டது. ஆனால் 2010இல் பஞ்சாபிக்கு இரண்டாம் மொழி தகுதி வழங்கப்பட்டது.[8]

பண்பாடு

ஹரியானாவின் பண்பாடு், நீடிய வரலாற்றை கொண்டது. கிராமிய கலைகள் இன்றும் பெரிதும் போற்றப்படுகின்றன. இம்மாநில நடனம் கோமர் எனப்படும் நடனமாகும். இந்தி மொழியும், அரியான்வி மொழியும் பெரும்பாலும் பேசப்படுகினறன. சில வட்டாரப் பேச்சு மொழிகளும் வழக்கில் உள்ளன. சமஸ்கிருதம் பல பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. நகரங்களில் ஆங்கிலம் கலந்த இந்தி பேசப்படுகிறது.

அரசாங்கம் மற்றும் அரசியல்

மற்ற இந்திய மாநிலங்களை போன்றே, முதல் மந்திரி பதவி, ஆளுநர் பதவியைவிட அதிக அதிகாரங்களை பெற்றது. அரியானாவின் சட்டசபை 90 உறுப்பினர்களைக் கொண்டது. அரியானாவுக்கு மாநிலங்களவையில் 5 இடங்களும், மக்களவையில் 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது . அரியானாவின் அரசியல் களத்தில் இருக்கும் மூன்று முக்கிய கட்சிகளாவன : இந்திய லோக் தளம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ். தற்போதய அரசு பூபின்தர் சிங் கூடா தலைமையின் கீழ் நிலையான ஆட்சி நடத்திவருகிறது.

பொருளாதாரம்

அரியானா நிலையான பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலம். கடந்த 2006-2007ம் ஆண்டுகளில், நிதி பற்றாக்குறை 0.6 விழுக்காடாக இருந்தது.[9] அரியானா கடந்த 2007 ம் ஆண்டு, தனிநபர் முதலிட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்கியது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ 1,86,045 கோடி அரியானாவில் முதலிடு செய்யப்பட்டுள்ளது.[10] அரியானா மாநிலம் 2006-07 ஆண்டில் மட்டும் ரூ 11,000 கோடி நேரடி அன்னிய முதலிட்டை ஈர்த்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன்ங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழும நிறுவனம், அரியானாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுமார் ரூ 40,000 கோடி செலவில், தனது தொழிலகங்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.[11] இம்மாநிலம் 4500 வங்கி கிளைகளுடன், வங்கிதுறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.

தொழில்துறை

அடுக்குமாடி குடியிருப்புகள், குர்கான் நகரம்
குர்கான் நகரம் , அரியானாவின் தொழில்நுட்ப நகரம்

தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் முன்னேற்றம் கண்ட குர்கான், பஞ்சகுலா, பரிதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் $ 40.4 பில்லியன் முதலிட்டில் ஆயிரத்துகுமதிகமான மத்திய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுள், இந்துஸ்தான் கண்ணாடிகள் நிறுவனம், மாருதி உத்யோக் நிறுவனம், எச்காட் நிறுவனம், ஹேரோ ஹோண்டா, அல்கேடல், சோனி, வீர்பூல், பாரதி தொலைதொடர்பு ஆகியவை குறிப்பிடதக்கவை. இது தவிர சுமார் 80,000 சிறு தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. யமுனாநகர் மாவட்டம் BILT காகித தொழில்சாலை செயல்பட்டு வருகிறது. பரிதாபாத் நகரம், அரியானாவின் மற்றுமொரு பெரிய தொழில்துறை நகராகும்.[12] இங்கு புகழ்பெற்ற நிறுவனங்களான ஓரியன் காற்றாடிகள் (பிர்லா குழுமம்), JCB இந்தியா, யமகா விசைப்பொறி இந்தியா Pvt. Ltd., வீர்பூல் , குட் ஈயர் உருளிப்பட்டை நிறுவனம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. பானிபட் நகரம் ஆடை தயாரிப்புக்கும், கம்பள தயாரிப்புக்கும் பெயர் பெற்றது. இங்கு தயாராகும் கைத்தறி ஆடைகள், உலகப் புகழ் பெற்றவை. மேலும், பானிபட் நகரில் இந்திய எண்ணெய் கழகத்திற்கு சொந்தமான ஒரு கல்நெய் சுத்திகரிப்பாலை செயல்பட்டு வருகிறது.

சேவை துறை

குர்கான் நகரம்,கடந்த சில வருடங்களில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வந்துள்ளது. கணிணித்துறையில் புகழ்பெற்று விளங்கும் பல நிறுவனங்கள் தங்கள் கிளை அலுவலகங்களை குர்கான் நகரில் அமைத்துள்ளனர்.

பொருளாதார போக்கு

கீழ்காணும் வரைபடம் இம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியினை சந்தை விலையில் குறிக்கிறது. எண்கள் ரூபாய் கோடிகளில்.[13]

வருடம்மொத்த உள்மாநில உற்பத்தி
1999–200050,787
2000–200156,955
2001–200263,489
2002–200369,653
2003–200478,816
2004–200589,431
2005–2006100,676
2007–2008101,319.42

[14]

வேளாண்மை

தற்காலத்தில் அரியானா தொழில்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பினும், அரியானா மக்களின் முக்கிய தொழில் வேளாண்மையே. சுமார் 70% மக்கள் விவசாய தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். கோதுமையும் அரிசியும் முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் , பருப்பு, பார்லி , சோளம், தினை ஆகியனவும் விளைகின்றன. சுமார் 86 விழுக்காடு நிலப்பரப்பு விவசாயத்திற்குகந்த நிலமாகவும், அதில் 96 விழுக்காடு விவசாய நிலமாகவும் பயன்படுத்தபடுகிறது. சுமார் 75% விவசாய நிலங்கள் ஆழ்குழாய் நீர்பாசனத்தையும் கால்வாய் நீர்பாசனத்தையும் நம்பியுள்ளவை. வேளாண்மை துறைக்கு பெரும் பங்காற்றியுள்ள சவுத்திரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் இம்மாநிலத்திலுள்ள கீசார் நகரில் அமைந்துள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

பிஞ்சூர் தோட்டம், அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம், பிரம்மசரோவர், குருச்சேத்திரம், கிருஷ்ணா அருங்காட்சியகம்[15]பாறைச் சிற்பத் தோட்டம் மற்றும் ரோசாத் தோட்டம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.