பானிப்பத்
பானிப்பட் (Panipat,
பானிப்பட் | |
— நகரம் — | |
![]() ![]() பானிப்பட்
, தில்லி | |
அமைவிடம் | 29°23′N 76°58′E |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பானிப்பட் |
ஆளுநர் | Kaptan Singh Solanki |
முதலமைச்சர் | மனோகர் லால் கட்டார் |
மக்கள் தொகை | 261 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 220 மீட்டர்கள் (720 ft) |
குறியீடுகள்
|
வரலாறு
மகாபாரத காலத்தில் பாண்டவர்களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம் ஆகும்.
பானிபட் போர்கள்
- முதலாம் பானிபட் போர் 1526 - பாபரின் படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடிப் படைகளுக்கும் 21 ஏப்ரல் 1526ல் நடைபெற்றது. போரில் பாபர் வென்று தில்லியில் முகலாய பேரரசை நிறுவினார்.
- இரண்டாம் பானிபட் போர் 1556 - வட இந்தியாவை ஆண்ட தில்லிப் பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் படைகளுக்கிடையே இடையே 5 நவம்பர் 1556இல் பானிபட்டில் போர் நடைபெற்றது[1] போரில் அக்பர் வென்றார்.[2]இப்போரில் அக்பர் வென்று தில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.
- மூன்றாம் பானிபட் போர் 1761 - மராட்டிய பேரரசின் படைகளுக்கும், அஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் 14 ஜனவரி 1761ல் நடந்தது. அகமது சா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாப் சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை. எனவே மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், தில்லிப் பகுதிகளை ஆப்கானியர்களுக்கு விட்டுத்தரப்பட்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவில் இந்தியாவில் கம்பெனி ஆட்சி வளரக் காரணமாயிற்று.
மேற்கோள்கள்
- Singh, Jagjit (Maj. General.) (2006). Artillery: The Battle-winning Arm. Lancer Publishers. பக். 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7602-180-7. http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19. பார்த்த நாள்: 11 July 2012.
- S. Chand. History of Medieval India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-219-0364-5.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.