அகமது ஷா துரானி

அகமது ஷா துரானி (ஆங்கிலம்:Ahmad Shah Durrani), (பஷ்தூ/பாரசீகம்: احمد شاه دراني) கி.பி.1722–1773 ஆப்கானிஸ்தானத்தில் முதல் அமீர் ஆவார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.[1][2][3][4] அப்போது ஆப்கானிஸ்தான், பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

அஹமது ஷா துரானி
சா, அமீர்
ஆட்சி1747–1772
முடிசூட்டு விழாஅக்டோபர் 16, 1747
முன்னிருந்தவர்உசைன் கொடகி
பின்வந்தவர்திமூர் சா துரானி
முழுப்பெயர்
அகமது கான் அப்தாலி
மரபுதுரானி
அரச குலம்துராணிப் பேரரசு
தந்தைமுகம்மது சமான் கான் அப்தாலி
தாய்சர்க்குனா அலாகொசை
பிறப்பு1722 (1722)
கெராட், ஆப்கானித்தான்
இறப்பு1773 (அகவை 5051)
கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
சமயம்சுன்னி இசுலாம்

பாரசீகத்தின் நாதிர் ஷா கொலையுண்ட போது (கி.பி.1747) ஆப்கானிய தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து அகமதுவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் அவர் தம் இனப் பெயரான 'அப்தாலி' என்பதை மாற்றி 'துரானி' என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது.

14 ஜனவரி 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றார்.

மேற்கோள்கள்

  1. "Aḥmad Shah Durrānī". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Online Version (2010). பார்த்த நாள் 2010-08-25.
  2. "Ahmad Shah and the Durrani Empire". Library of Congress Country Studies on ஆப்கானித்தான் (1997). பார்த்த நாள் 2010-09-23.
  3. பிரெட்ரிக் எங்கெல்சு (1857). "Afghanistan". Andy Blunden. The New American Cyclopaedia, Vol. I. பார்த்த நாள் 2010-09-23.
  4. Clements, Frank (2003). Conflict in Afghanistan: a historical encyclopedia. ABC-CLIO. பக். 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781851094028. http://books.google.com/books?id=bv4hzxpo424C&lpg=PP1&pg=PA81#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2010-09-23.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.