தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)

தேசிய தலைநகர் வலயம்,இந்தியா- தேசிய தலைநகர் பகுதி, தில்லியை முழுமையாகவும், அதன் அருகாமையில் சூழ்ந்துள்ள அரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் இராசத்தான் மாநிலங்களின் ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாநகரப் பகுதி அல்லது நகர்தொகுதியாகும். மொத்த பரப்பளவு 33578 ச.கி.மீ கொண்ட இது உலகின் பெரும் ஊரக நகர்ப்பகுதிகளில் ஒன்றாகும்.

இது தில்லி மற்றும் அதனைச் சூழ்ந்த ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய தேசிய தலைநகர் வலயத்தினைப் பற்றியதாகும். நீங்கள் தேசிய தலைநகர் பகுதி, தில்லி, தில்லி அல்லது புது தில்லி காண விரும்பினீர்களா ?

எழுவாய்

தேசிய தலைநகர் வலயம் அமைப்பதற்கான எழுவாயாக 1962 ஆம் ஆண்டிற்கான தில்லிக்கான பெருந்திட்டத்தில் இடம் பெற்ற பரிந்துரைகள் அமைந்தன. தில்லியின் மக்கட்தொகை பெருக்கத்தினால் எழும் நெருக்கத்தினை குறைக்குமுகமாக தில்லி ஆட்சிப்பகுதியும் அதன் சுற்றுப்புற நகர்களும் இணைந்த ஊரகப்பகுதியினை மேம்படுத்த வேண்டியதன் தேவை அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தில்லியை தனித்து திட்டமிடாது சுற்றுப்புற நகர்பகுதிகளுடன் இணந்து திட்டமிட வசதியாக ஏற்படவேண்டிய தேசிய தலைநகர் வலயத்தின் கட்டமைப்பு, அதிகாரமுள்ள திட்டக்குழு மற்றும் ஆற்றவேண்டிய திட்டம் என்பனவற்றை பரிந்துரைகள் உள்ளடக்கியிருந்தன. இத்தகைய தேவை நாளொரு வண்ணம் அதிகரிக்க இந்திய நாடாளுமன்றம் 1985ஆம் ஆண்டில் தொடர்புடைய அரியானா,இராசத்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களின் ஒப்புமையுடன் திட்டக்குழு சட்டம் இயற்றியது. அதன் அட்டவணைகள் எந்தெந்த பகுதிகள் தேசிய தலைநகர் வலயத்தில் உள்ளடங்கும் என வரையறுத்தது.

பங்கேற்கும் மாநிலங்கள்

பகிர்ந்தளிக்கும் பரப்பு.
மாநிலம் பரப்பு
தில்லி தலைநகர் பகுதி 1483 ச.கி.மீ
அரியானா 13413ச.கி.மீ
உத்திரப்பிரதேசம் 10853ச.கி.மீ
இராசத்தான் 7829ச.கி.மீ

தேசிய தலைநகர் வலயம், இந்தியாவில் பங்கேற்கும் நான்கு மாநிலங்கள் -

தேசிய தலைநகர் பகுதி, தில்லி

தேசிய தலைநகர் பகுதி, தில்லி தேசிய தலைநகர் வலயத்தின் மையமாகும். இது தில்லி மற்றும் இந்தியாவின் நடுவண் அரசின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் புது தில்லியை உள்ளடக்கியது. இங்குதான் மக்கள் அடர்த்தி மிகுந்துள்ளது. 2001 ஆண்டு கணக்கெடுப்பின்படி 13,782,976 ஆக இருந்த மக்கட்தொகை 2007 ஆண்டில் 17 மில்லியனாக உயர்ந்தது.

அரியானா

தில்லியின் மேற்கு,வடக்கு மற்றும் தெற்கில் சூழ்ந்திருக்கும் அரியானா தேசிய தலைநகர் வலயத்திற்கு மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளாக இருந்து 13413ச.கி.மீ பரப்பினை பங்களிக்கிறது. வலயத்தில் உள்ளடங்கிய மாவட்டங்கள்:-

இராசத்தான்

இராசத்தான் தில்லியின் தென்மேற்கே அமைந்துள்ளது. தில்லியுடன் எந்த எல்லையையும் பகிராவிடினும் தேசிய தலைநகர் வலயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கேற்கும் மாவட்டம்:

உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசம் (உ.பி) தே.த.வலயத்திற்கு பெரும் பரப்பைக் கொடுக்கிறது. தில்லியின் கிழக்கு எல்லையாக விளங்கும் இம்மாநிலம் தே.த.வலயத்தின் கிழக்குப் பகுதியாகவும் விளங்குகிறது. இமாநிலத்தின் பங்கேற்கும் மாவட்டங்கள் :-

நோக்கங்களும் இலக்குகளும்

தில்லியின் மாநகர மற்றும் மண்டல பொருளாதார வளர்ச்சியை உள்வாங்கி சரிசமமான வளர்ச்சியை சீராக அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுதல், போக்குவரத்து பிணையத்தை சீரமைத்தல், கட்டுமானப் பணிகளின் வளர்ச்சி, நிலப் பயன்பாட்டை சீர்படுத்தல், சுற்றுச்சூழல், வாழ்க்கைத்தரம் மேம்படுத்தல் என்பவை இத்திட்டகுழுவின் நோக்கங்களும் இலக்குகளுமாகும்.

மக்கள் இடம்பெயர்வதை தடுக்கும் விதமாக எதிர்கவர்ச்சி பகுதிகளாக அரியானாவில் ஹிஸ்ஸார், பஞ்சாபில் பாட்டியாலா, இராசத்தானில் கோடா, உத்திரப்பிரதேசத்தில் பரைய்லி மற்றும் மத்தியப்பிரதேசத்தில் குவாலியர் இவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தல்.

தேசிய தலைநகர் வலயம் - மண்டலங்கள்

  • தே.த.வ-தில்லி பரப்பு 1,483 கிமீ2
  • மத்திய தே.த.வ (ம.தே.த.வ) பரப்பு 2000 கிமீ2. உள்ளடக்கிய துணைநகரங்கள் பாரிதாபாத்-பல்லப்கர், குர்குவான்-மனேசர், பகதூர்கர், சோனிப்பட்-குண்ட்லி, காசியாபாத்-லோனி புலந்த்சகர் மற்றும் நோய்டா-பெருநகர் நோய்டா.
  • நெடுஞ்சாலை இடைவழி வலயம் - தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 மீ அகலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 300 ச.கி.மீ பரப்பு.
  • மற்ற பகுதிகள் பரப்பு சுமாராக 29,795 கிமீ2.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.