நேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டி

நேரு கோப்பை (அல்லது ஓஎன்ஜிசி நேரு கோப்பை) அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்தும் ஓர் பன்னாட்டு சங்க காற்பந்தாட்டப் போட்டியாகும். 1982ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்தப் போட்டி 1998 முதல் 2006 வரை நடைபெறவில்லை. 1997ஆம் ஆண்டில் ஈராக் காற்பந்தாட்ட அணி வென்ற பிறகு 2007 ஆம் ஆண்டிலேயே மீளவும் துவங்கப்பட்டது. ஆகத்து 17 முதல் 29 வரை ஆடப்பட்ட 2007ஆம் ஆண்டுப் போட்டிகளில் சிரியா, கிர்கிசுத்தான், கம்போடியா, பங்களாதேசம் ஆகிய நாட்டு அணிகளுடன் இந்தியாவும் பங்கேற்றது. இந்த ஆண்டில் போட்டிகளின் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா வாகை சூடி நேரு கோப்பையை வென்றது.

நேரு கோப்பை பன்னாட்டு கால்பந்து போட்டி
தோற்றம்1982
மண்டலம்பன்னாட்டளவில்
தற்போதைய வாகையாளர்வார்ப்புரு:India (3 முறை)
அதிக முறை வென்ற அணி சோவியத் ஒன்றியம் (4 முறை)
2012 நேரு கோப்பை

2009ஆம் ஆண்டுக்கானப் போட்டிகள் புது தில்லியில் ஆகத்து 19 முதல் 31 வரை விளையாடப்பட்டன. பாலத்தீனக் காற்பந்து அணியை அனைத்திந்திய காற்பந்துக் கூட்டமைப்பு விளையாட அனுமதிக்காத நிலையில்[1] போட்டிகள் சுழல்முறை வடிவத்தில் ஐந்து அணிகளும் ஒன்றுடன் ஒன்றாக விளையாடப்பட்டன. முதலாவதாக வந்த இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடின. இந்தியக் காற்பந்தாட்ட அணி சிரியாவை போட்டிநேரத்தில் 1-1 என்ற சமநிலை எய்தபின் பெனால்டிகளில் 5-4 என்ற கணக்கில் வென்று கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது.

நேரு கோப்பையின் பதினைந்தாவது பதிப்பாக 2012ஆம் ஆண்டில் ஆகத்து 22 முதல் செப்டம்பர் 2 வரை புது தில்லியில் விளையாடப்பட்டது.[2] ஐந்து அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் கேமரூனும் விளையாடின. 120 மணித்துளிகள் ஆடிய பின்னரும் 2-2 என்ற சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டி முறை முடிவுமுறையில் இந்தியா 5-4 என்ற கணக்கில் வென்று மூன்றாம் முறையாக கோப்பையை வென்றது.[3][4]

போட்டித் தரவுகள்

ஆண்டு நடத்துநர் இறுதிப்போட்டி
வாகையாளர் ஆட்டப் புள்ளிகள் இரண்டாமிடம்
1982
கொல்கத்தா, இந்தியா
உருகுவே
2 - 0
சீனா
1983
கொச்சி, இந்தியா
அங்கேரி
2 - 1

சீனா
1984
கொல்கத்தா, இந்தியா
போலந்து
1 - 0
சீனா
1985
கொச்சி, இந்தியா
சோவியத் ஒன்றியம்
2 - 1
யுகோசுலோவியா
1986
திருவனந்தபுரம், இந்தியா
சோவியத் ஒன்றியம்
1 - 0
சீனா
1987
கோழிக்கோடு, இந்தியா
சோவியத் ஒன்றியம்
2 - 0
பல்கேரியா
1988
சிலிகுரி, இந்தியா
சோவியத் ஒன்றியம்
2 - 0
போலந்து
1989
மத்காவ், இந்தியா
அங்கேரி
2 - 1
சோவியத் ஒன்றியம்
1991
திருவனந்தபுரம், இந்தியா
ருமேனியா
3 - 1
அங்கேரி
1993
சென்னை, இந்தியா
வட கொரியா
2 - 0
ருமேனியா
1995
கொல்கத்தா, இந்தியா
ஈராக்
1 - 0
உருசியா
1997
கொச்சி, இந்தியா
ஈராக்
3 - 1
உசுபெக்கிசுத்தான்
2007
புது தில்லி, இந்தியா
இந்தியா
1 - 0
சிரியா
2009
புது தில்லி, இந்தியா
இந்தியா
1 – 1 (கூடுதல் நேரத்திற்குப் பின்)

5 - 4 (Penalty)


சிரியா
2012
புது தில்லி, இந்தியா
இந்தியா
2 – 2 (கூடுதல் நேரத்திற்குப் பின்)

5 - 4 (Penalty)


கேமரூன்

மொத்த வெற்றிகள்

வெற்றிகள்நாடுஆண்டு
4 முறை சோவியத் ஒன்றியம்1985, 1986, 1987, 1988
3 முறை இந்தியா2007, 2009, 2012
2 முறை அங்கேரி1983,1989
2 முறை ஈராக்1995, 1997
1 முறை உருகுவே1982
1 முறை போலந்து1984
1 முறை ருமேனியா1991
1 முறை வட கொரியா1993

மேற்கோள்கள்

  1. "Palestine not part of Nehru Cup". The Indian Express. 11 August 2009. http://www.indianexpress.com/news/palestine-not-part-of-nehru-cup/500376/. பார்த்த நாள்: 2 September 2012.
  2. "Wim Koevermans named as new Senior Team Coach". The All India Football Federation. பார்த்த நாள் 15 June 2012.
  3. "India beat Cameroon to win third successive Nehru Cup title". Times Of India. மூல முகவரியிலிருந்து 3 January 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 Sept 2012.
  4. "நேரு கோப்பை கால்பந்து: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்". தினமணி (செப்டம்பர் 04, 2012). பார்த்த நாள் செப்டம்பர் 04, 2012.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.