தினமணி
தினமணி இந்தியாவின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, தருமபுரி, புதுதில்லி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.
வகை | தினசரி நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
வெளியீட்டாளர் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் |
நிறுவியது | செப்டம்பர் 11, 1934 |
அரசியல் சார்பு | இல்லை |
மொழி | தமிழ் |
தலைமையகம் | தமிழ்நாடு |
இணையத்தளம் | www.dinamani.com |
தினமணியை வெளியிடும் நிறுவனம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.
முதல் இதழ்
1934 செப்டம்பர் 11 பாரதியாரின் நினைவு நாளன்று அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.
தினமணிக் கதிர்
தினமணிக் கதிர் என்பது தினமணி நாளிதழின் ஞாயிற்றுக்கிழமை இதழுடன் இலவசமாக அளிக்கப்படும் இதழாகும். பல்சுவை இதழாக வெளியாகும் இந்த இதழில் சிறுகதை, கட்டுரை, நகைச்சுவைப் பகுதி, துணுக்குகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
தினமணி ஆசிரியர்கள்
- டி. எஸ். சொக்கலிங்கம்
- ஏ.என்.சிவராமன்
- ஐராவதம் மகாதேவன்
- கி. கஸ்தூரிரங்கன்
- மாலன்
- இராம.திரு.சம்பந்தம்
- கே.வைத்தியநாதன் (தற்போதைய ஆசிரியர்)
இணையவழிப் பயணம்
"நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்" என்கிற குறிக்கோளுடன் தற்போது இணையதளத்தின் மூலமாகவும் வெளிவருகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
- உத்தியோகபூர்வ வலைத்தளம்
- தினமணி வலைப்பூ
- http://www.expressbuzz.com (ஆங்கிலம்)
- http://www.indiavarta.com (ஆங்கிலம்)
- http://www.dinamani.com (தமிழ்)
- http://www.kannadaprabha.com (கன்னடம்)
- http://www.andhraprabha.com (தெலுங்கு)
- http://www.apweekly.com (தெலுங்கு)
- http://www.cinemaexpress.com (தமிழ்)
- http://www.malayalamvarikha.com (மலையாளம்)
- http://www.tamilanexpress.com (தமிழ்)
- தமிழ் இலக்கியத் திருவிழா