சோவியத் ஒன்றியம்
சோவியத் ஒன்றியம் (Soviet Union, இரசியம்: Сове́тский Сою́з - சவியெத்ஸ்கி சயூஸ்) எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]) என்பது 1922 இல் இருந்து 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இல் இருந்து 1991 இல் கலைக்கப்படும் வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது.
சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் Союз Советских Социалистических Республик Union of Soviet Socialist Republics | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறிக்கோள் Пролетарии всех стран, соединяйтесь! உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்! | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்பண் en:The Internationale (1922–1944) சோவியத் தேசியப்பண் (1944-1991) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() சோவியத் ஒன்றியம் அமைவிடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | மாஸ்கோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மொழி(கள்) | ரஷ்ய மொழி, உக்ரேனியம், பெலரசியம், எஸ்தோனியம், லாத்வியம், லித்துவேனியம், மல்தோவியம், ஜோர்ஜியம், ஆர்மேனியம், அசர்பஜானி, கசாக், உஸ்பெக், துருக்மென், கிர்கீசு, தஜிக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | கூட்டாட்சி சோசலிசக் குடியரசு, தனிக்கட்சி பொதுவுடமை அரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுச் செயலாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | 1922–1953 (முதலாவது) | ஜோசப் ஸ்டாலின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | 1985–1991 (கடைசி) | மிக்கைல் கொர்பச்சோவ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | 1923–1924 (முதலாவது) | விளாதிமிர் லெனின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | 1991 (கடைசி) | இவான் சிலாயெவ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | உருவாக்கம் | டிசம்பர் 30 1922 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | குலைவு | டிசம்பர் 26, 19911 1991 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பரப்பளவு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | 1991 | 2,24,02,200 km² (86,49,538 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்கள்தொகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- | 1991 est. | 29,30,47,571 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி | 13.1 /km² (33.9 /sq mi) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாணயம் | ரூபில் (SUR) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணைய குறி | .su | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொலைபேசி | +7 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
11991, டிசம்பர் 21 இல் அல்மா-ஆட்டா என்ற இடத்தில் கூடிய 11 முன்னாள் சோவியத் கூட்டாட்சி நாடுகள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதாகவும், பொதுநலவாய சுதந்திர நாடுகள் என்ற அமைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். ஜோர்ஜியா இதில் பார்வையாளராகக் கலந்து கொண்டது. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Warning: Value specified for "continent" does not comply |
இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இல் இருந்து இது கலைக்கப்படும் வரை ஏறத்தாழ ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை.
சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.
முதலில் 4 சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியமாக ஆக்கப்பட்டு, 1956ல் பின்வரும் 15 அங்கத்தினர்களை உள்ளடக்கியது: அர்மீனிய சோ.சோ.கு, அசர்பைஜான் சோசோகு, பியாலோரசியன் சோசோகு, எஸ்டோனியன் சோசோகு, ஜார்ஜிய சோசோகு, கசாக் சோசோகு, கிர்கிசிய சோசோகு,லாட்விய சோசோகு, லிதுவேனிய சோசோகு, மோல்டாவிய சோசோகு, ரஷ்ய சோசோகு, டாஜிக் சோசோகு, துருக்மான் சோசோகு, உக்ரெயின் சோசோகு, மற்றும் உஸ்பெக் சோசோகு.