2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளிடையே நடைபெறும் பத்தொன்பதாவது மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஒன்பதாவது விளையாட்டுகளாகும். இவை இந்தியாவில் தில்லியில் 2010ஆம் ஆண்டு 3 அக்டோபர் முதல் 14 அக்டோபர் வரை நடைபெற உள்ளன. இதுவே இதுவரை இந்தியா மற்றும் தில்லியில் நடைபெறும் மிகப்பெரும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வாகும். இதற்கு முன்னர் 1951ஆம் ஆண்டிலும் 1982ஆம் ஆண்டிலும் ஆசிய விளையாட்டுகள் நடத்தி உள்ளது. பொதுநலவாய விளையாட்டுகள் 1998ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூர் நகரை அடுத்து இரண்டாவது முறையாக ஆசியாவில் நடைபெறுகிறது.

XIX பொதுநலவாய விளையாட்டுக்கள்
XIX பொதுநலவாய விளையாட்டுக்கள்
2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் லோகோ
நிகழ் நகரம்டில்லி, இந்தியா
குறிக்கோள்வெளியே வா, விளையாடு
பங்குபெறும் நாடுகள்72 பொதுநலவாயம் அணிகள்
நிகழ்வுகள்17 துறைகளில் 260 நிகழ்வுகள்
துவக்கவிழா3 அக்டோபர்
இறுதி விழா14 அக்டோபர்
முதன்மை விளையாட்டரங்கம்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
இணையதளம்http://www.cwgdelhi2010.org

நிகழ்ச்சிநிரல்

2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான அலுவல்முறை நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு:[12]

      துவக்கவிழா      போட்டி நிகழ்வுகள்      இறுதி விழா
அக்டோபர்  3      4     5     6     7     8     9     10     11     12     13     14   நிகழிடம்
விழாக்கள்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
நீர் விளையாட்டுக்கள்எஸ்பிஎம் நீச்சல்குள வளாகம்
வில்வித்தையமுனா விளையாட்டு வளாகம்
தட கள விளையாட்டுக்கள்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் & இந்தியா வாயில் (India Gate)
பூப்பந்தாட்டம்சிரி கோட்டை விளையாட்டரங்கம்
குத்துச்சண்டைதல்கடோரா விளையாட்டரங்கம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம்இந்திரா காந்தி மையம், இந்தியா வாயில் (India Gate)
சீருடற்பயிற்சிகள்இந்திரா காந்தி மையம்
வளைதடிப் பந்தாட்டம்தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்
புல்தரை பௌலிங்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
வலைப் பந்தாட்டம்தியாகராஜ் விளையாட்டரங்கம்
எழுவர் ரக்பிதில்லி பல்கலைக்கழகம்
சுடுதல் (விளையாட்டு)முனைவர். கர்ணிசிங் சுடுதல் வெளி
ஸ்குவாஷ்சிரி கோட்டை விளையாட்டரங்கம்
மேசைப்பந்தாட்டம்யமுனா விளையாட்டு வளாகம்
டென்னிசுஆர்கே கண்ணா டென்னிஸ் வளாகம்
ஒலிம்பிக் பாரம் தூக்குதல்சவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
மற்போர்இந்திரா காந்தி மையம்
அக்டோபர்3 4 5 6 7 8 9 10 11 12 13 14 நிகழிடம்

பங்குபெறும் நாடுகள்

2010 பொதுநலவாய விளையாட்டுகளில் பங்குபெற தற்போது 72 நாடுகள் திட்டமிட்டுள்ளன. பொதுநலவாய நாடுகளிலிருந்து பிஜி விலக்கப்பட்டிருப்பதால் விளையாட்டுகளில் பங்குபெற தடை செய்யப்பட்டுள்ளது.[13] ருவாண்டா 2009ஆம் ஆண்டு பொதுநலவாயத்தில் இணைந்ததை யடுத்து இவ்விளையாட்டுகளில் பங்கேற்க தனது அணியை அனுப்புகிறது.[14]

2010 விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ள நாடுகள்

சர்ச்சையில் இப்போட்டி

கட்டமைப்புக் குறைபாடுகள்

21 அக்டோபர் 2010 மைதானத்திற்கு வெளியே உள்ள நடை மேம்பாலம், இடிந்து நொறுங்கியதில் 27 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர்.இதன் தொடர்ச்சியாக 22 அக்டோபர் 2010 இம்மைதானத்தில் உள்ள பளுதூக்குதல் மையத்தின் அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்ததுகடந்த 3 நாட்களில் 3 வது முறையாக மைதானத்தில் சில பகுதிகள் இடிந்து விழுந்ததால், காமன்வெல்த் போட்டிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான குடியிருப்பு வளாகம், விளையாட்டு கிராமம் என்று அழைக்கப்படுகிறது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதிய வசதிகள் இல்லை என்றும், வீரர், வீராங்கனைகள் தங்க இயலாத அளவுக்கு இருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.இதனால் போட்டி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது [15]

இந்த ஆடுகளத்தினை செப்பனிடுவதில் ஈடுபட்டிருந்த PNR Infra(http://www.pnr.in) என்ற நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்தது அரசு.[16]

பாதுகாப்பு கவலைகள்

சம்மு காசுமீர் கலவரங்கள், பாபர் மசூதி தீர்ப்பினால் எழக்கூடிய கலவரங்கள்,வெளிநாட்டுத் தீவிரவாதிகள் மும்பை சம்பவம் போன்ற தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு எனப் பல காரணங்களால் பங்கேற்கும் நாடுகள் கவலையடைந்துள்ளன.பாதுகாப்பு பிரச்னை காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் "டிரிபிள் ஜம்ப்' வீரர் பிலிப்ஸ் இடோவு விலகியுள்ளனர். இதே போல ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இங்கிலாந்தின் தடகள வீராங்கனை கிறிஸ்டியன் ஒகுருகு, மெல்போர்ன் காமன்வெல்த், 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற லிசா டோப்ரிஸ்கி ஆகியோரும் விலகியுள்ளனர்.[17]

மேற்கோள்கள்

  1. CWG Venues, 2010 Commonwealth Games, 13 May 2007.
  2. Jawaharlal Nehru Stadium Information
  3. "Indira Gandhi Arena". பார்த்த நாள் 2008-08-27.
  4. "New stadiums". பார்த்த நாள் 2010-01-19.
  5. "Shera — the friendly tiger will be the mascot for the 2010 Commonwealth Games, Financial Express, 9 March 2006". பார்த்த நாள் 2010-03-05.
  6. Trees. Delhi Greens. Retrieved on 2010-07-06.
  7. "Students protest against felling of trees eating of footpath space/".
  8. Correa slams DDA for Siri Fort mess. Express India (2009-03-07). Retrieved on 2010-07-06.
  9. Siri Fort Games project gets SC’s okay. Express India (2009-04-28). Retrieved on 2010-07-06.
  10. "Supreme Court Clears Siri Fort Complex, Indian Express, 28 April 2009".
  11. Games Village flouting ecological norms - India News - IBNLive. Ibnlive.in.com (2010-02-03). Retrieved on 2010-07-06.
  12. "Competition Schedule". Organising Committee Commonwealth Games 2010 Delhi. பார்த்த நாள் 16 April 2010.
  13. "Fiji to appeal Commonwealth Games ban", The Times of India, 1 December 2009
  14. http://www.thecgf.com/countries/intro.asp?loc=RWA
  15. http://www.maalaimalar.com/2010/09/23144633/commonwealth-competition-two-c.html
  16. http://calcuttatube.com/construction-firm-pnr-infra-blacklisted-foot-overbridge-collapse-says-sheila-dikshit/120714/
  17. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=90721

புற இணைப்புகள்

முன்னர்
மெல்பெர்ன்
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
நிகழ்நகரம்
XIX பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
பின்னர்
கிளாஸ்கோ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.