செங்கோட்டை
டெல்லி கோட்டை , லால் குயிலாஹ் , அல்லது லால் குயிலா எனறும் அழைக்கப்படுகிறது (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ , இதன் பொருள் செங்கோட்டையைக் குறிக்கும்), இது இந்தியாவின் மதில்சுவர்களின் நகரமான பழைய தில்லியில் அமைந்துள்ளது, மேலும் இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.[1]
The Red Fort | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() The Delhi Fort, also known as the Red Fort, is one of the popular tourist destinations in Delhi | |
வகை | Cultural |
ஒப்பளவு | ii, iii, iv |
உசாத்துணை | 231 |
UNESCO region | Asia-Pacific |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2007 (31st தொடர்) |
வரலாறு
.jpg)

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி, 1648 ஆம் ஆண்டு கட்டி முடித்தார். [2] இந்த செங்கோட்டை உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரச குடும்பத்தினர் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் தளவரைபடமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோட்டையானது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் அமைப்பு மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகின்றது. இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகு, பேரரசர் ஷாஜகானால் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கோட்டையின் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் ஔரங்கசீப் காலத்திலும் அதற்குப்பிறகு வந்த முகலாயர்களின் ஆட்சிகாலத்திலும் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1857 ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப்போர் முடிவுற்ற பின்பு, இந்த இடத்தின் ஒட்டுமொத்த அமைப்புகளில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் வெளிக்கொணரப்பட்டன. சுதந்திரத்திற்கு பின்னர், இந்த இடத்தின் கட்டமைப்பில் சேர்த்தல்/திருத்தம் வரையறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தக்கோட்டை முக்கியமான இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டது, மேலும் சுதந்திரம் அடைந்த பின்னரும் 2003 ஆம் ஆண்டு வரையில் இந்த கோட்டையின் முக்கியமான பகுதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
செங்கோட்டையானது, முகலாய பேரரசர் ஷாஜகானின் புதிய தலைநகரமான ஷாஜகானாபாத்தின் அரண்மனையாக இருந்தது, மேலும் டெல்லியின் ஏழாவது தலைசிறந்த நகரமாகவும் விளங்கியது. அவரது ஆட்சிகாலத்தின் மதிப்பை உயர்த்தவும், அவரது கட்டிடக்கலை குறித்த திட்டங்கள் மற்றும் ஆர்வத்தினை செயல்படுத்த போதிய வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் தனது தலைநகரத்தை ஆக்ராவிலிருந்து இங்கு மாற்றினார்.
இந்த கோட்டையானது யமுனா நதிக்கரையில், பெரும்பாலும் சுற்றிலும் மதில்களைக் கொண்ட அகழியால் சூழப்பட்டுள்ளது. இந்த சுவரின் வடகிழக்கு முனை, 1546 ஆம் ஆண்டு இஸ்லாம் ஷா சுரியால் கட்டப்பட்ட பாதுகாப்பு கோட்டையான சலிம்கர் கோட்டைக்கு அருகாமையிலிருக்கும் படி கட்டப்பட்டுள்ளது. செங்கோட்டையின் கட்டிடப் பணி 1638 ஆம் ஆண்டில் தொடங்கி 1648 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.
11 மார்ச் 1783 இல், சீக்கியர்கள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து திவான்-இ-அம்யைக் கைப்பற்றினர். இந்த நகரத்தை ஆண்ட முகலாயரான வசீர், சீக்கியர்களிடம் சரணடைந்து, பின்னர் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டார். இந்தச் செயலானது கரோர் சிங்கிய குலத்தைச்சேர்ந்த சர்தார் பகெல் சிங் தலிவால் ஆணையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்தக்கோட்டையை வைத்திருந்த கடைசி முகலாய பேரரசர், பகதூர் ஷா II "ஜாபர்" ஆவார். `முகலாயர்களின் ஆட்சியில் அவர்களின் பாதுகாப்பு திறமைகள் இருந்த போதிலும், 1857 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான எழுச்சியின் போது அவர்களால் செங்கோட்டையை தற்காத்துக் கொள்ளமுடியவில்லை. 1857 கலகத்தில் தோல்வியடைந்த பின்னர், 17 செப்டம்பர் அன்று ஜாபர் கோட்டையை விட்டு வெளியேறினார். ஆங்கிலேயரின் கைதியாக அவர் செங்கோட்டைக்குத் திரும்பிவந்தார். 27 ஜனவரி 1858 இலிருந்து ஜாபர் தீவிர நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அக்டோபர் 7 அன்று நாடு கடத்தப்பட்டார்.
15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியா சுதந்திர தேசமானது. இது இந்தியப் பிரதமர் ஜவகர் லால் நேரு அவர்கள் 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவின் சுதந்திரக்கொடியை ஏற்றியதன் மூலம் குறிப்பிடப்பட்டது. சுதந்திர நாளில் பிரதமரால தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் பிரசித்தி பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமானது.
கட்டடக்கலை வடிவமைப்பு


செங்கோட்டையில் மிக உயர்தரமான கலை ஒவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் காட்சிப் பொருட்களாகக் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும், இது மிகவும் உயர்தர வடிவத்தையும், வெளிப்பாடு மற்றும் நிறங்களையும் கொண்டதனித்துவம் வாய்ந்த ஷாஜகானின் பாணியில் முன்னேற்றத்தின் விளைவாகும். டெல்லியில் உள்ள செங்கோட்டையானது, இந்தியாவின் நீண்டகால வரலாற்றையும் அதன் கலைகளையும் உள்ளடக்கிய முக்கிய கட்டட வளாகங்களில் ஒன்றாகும். இதன் தனிச்சிறப்பானது காலத்திற்கும் அதன் பரப்பிற்கும் அப்பாற்பட்டதாகும். இது கட்டடக்கலை நுணுக்கத்திற்கும் வலிமைக்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. 1913 இல் இது முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்படும் முன்பே, செங்கோட்டை அடுத்தத் தலைமுறைக்காக பேணிபாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக்கோட்டையின் சுவர்கள் வழுவழுப்பாகவும், இதன் மதிற்சுவர்கள் உறுதியான கம்பி வரிசைகளால் இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவை டெல்லி மற்றும் லாகூர் வாயிற்கதவுகள் என்ற இரு முக்கிய வாயிற்கதவுகளில் திறக்கப்படுகின்றன. இதில் லாகூர் வாயிற்கதவே முக்கிய நுழைவாயிலாக இருக்கின்றது; இது சட்டா சவுக் எனப்படும் நீண்ட கடைவீதியில் கொண்டுவிடுகிறது, அதன் சுவர் நீளத்திற்கு இங்கு வரிசையாகக் கடைகளைக் கொண்டுள்ளன. சட்டா சவுக், வடக்கு-தெற்குத் தெருக்கள் சந்திக்கும் ஒரு பெரிய திறந்தவெளிக்கு கொண்டுவிடுகிறது, உண்மையில் இந்தச் சந்திப்பானது மேற்கில் கோட்டையின் இராணுவ விழாக்கள் நடக்கும் இடத்தையும், கிழக்கில் உள்ள அரண்மனைகளையும் பிரிக்கின்றது. இந்தத் தெருவின் தெற்கு மூலையில் டெல்லி கேட் அமைந்துள்ளது.
கோட்டையின் உட்புறம் உள்ள முக்கிய கட்டடங்கள்
திவான்-இ-ஆம்

வாயிற்கதவிற்கு அப்பால் மற்றொரு பெரிய திறந்தவெளி உள்ளது, இது உண்மையில் திவான்-இ-ஆமிற்கு முற்றமாக பயன்படுத்தப்பட்டது, பேரரசைச்சார்ந்த பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய காட்சி அரங்கானது, நன்கு அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம்(ஜரோகா ) பேரரசருக்காக மேல்மாடத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அணிவரிசைகள் தங்க முலாம் பூசப்பட்டிருந்தன, மேலும் பொதுமக்களிடமிருந்து சிம்மாசனத்தைப் பிரிக்க தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
திவான்-இ-காஸ்

திவான்-இ-காஸ் உள்ள காட்சி அரங்கு முற்றிலும் பளிங்குக்கல்லால் ஆனது, இங்குள்ள தூண்கள் பூக்களைப் போன்று செதுக்கப்பட்டும் மற்றும் மதிப்புமிக்க கற்களால் அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்டும் இருந்தன. ஷாஜகான் இங்கு நாள் முழுக்க குரைக்கும் நாய்களைப் பிடித்து விளையாட ஒரு குதிரையை வைத்திருந்தார்.
நஹர்-ஏ-பெகிஷ்த்
பேரரசுக்குரிய தனியறை இங்குள்ள சிம்மாசனத்திற்கு அருகில் அமைந்திருந்தது. இந்த தனியறையில் வரிசையாக அமர காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது, இங்கு அமர்ந்து பார்த்தால் கோட்டையின் கிழக்கு முனையில் உள்ள யமுனா நதி தெரியும்படி அதன் தளம் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த காட்சி அரங்கு, நஹர்-ஏ-பெகிஷ்த் அல்லது "பேரின்பம் தரும் ஓடை" எனப்படும் கால்வாயை இணைக்கும் படி இருந்தது, இந்தக் கால்வாயானது காட்சி அரங்குக்கு நடுவே ஓடும் படி அமைக்கப்பட்டிருந்தது. தண்ணீரானது, கோட்டையின் வடகிழக்கு முனையில் உள்ள ஷாஹ் பர்ஜ் கோபுரத்தின் வாயிலாக யமுனா நதியில் இருந்து வரவழைக்கப்பட்டது. குரானில் சொல்லப்பட்டது போன்று இந்த அரண்மனையானது சொர்க்கத்தை ஒத்திருக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது; இந்த அரண்மனையைச்சுற்றி, "பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இங்குதான் உள்ளது! இங்குதான் உள்ளது!" என்ற வாசகம் ஈரடிச்செய்யுளாக எழுதப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் வடிவம் இஸ்லாமியர்களின் மரபை ஒத்திருந்தது, இங்குள்ள முகலாய கட்டடத்தில் ஒவ்வொரு காட்சி அரங்கத்தின் கட்டடக்கலையின் கூறுகளில் இந்துக்களின் தாக்கங்கள் தெரிகின்றது. இந்த செங்கோட்டையில் உள்ள அரண்மனை வளாகமானது, முகாலய பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஜெனானா

அரண்மனையின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ஜெனானாக்கள் அல்லது பெண்களுக்கான காட்சி அரங்குகள்: மும்தாஜ் மஹால் (இப்போது அருங்காட்சியகமாக உள்ளது), மற்றொன்று புகழ்பெற்ற மிகவும் பகட்டான ரங் மஹால் ஆகும், இது இதன் தங்கமுலாமினால் அழங்கரிக்கப்பட்ட உட்கூரை மற்றும் நஹர்-ஏ-பெகிஷ்த்திலிருந்து நீர் நிரப்பப்பட்ட பளிங்குக்கற்களாலான குளத்திற்கு மிகவும் பிரபலமானது.
மோடி மசூதி
மோடி மசூதி எனப்படும் பேர்ல் பள்ளிவாசல் ஹம்மாமின் மேற்குப்பகுதியில் உள்ளது. இந்தத் தனியார் பள்ளிவாசல் ஷாஜகானின் வழித்தோன்றலான ஔரங்கசீப்பினால் 1659 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஒரு சிறிய, வெள்ளை பளிங்குக்கற்களால் செதுக்கப்பட்ட மூன்று-வளைவுக்கூரைகளைக் கொண்ட பள்ளிவாசல் ஆகும், கீழிருக்கும் மூன்று வளைவுகள் இதன் முற்றத்தை அலங்கரிக்கின்றன.
ஹயாத் பாக்ஷ் பாக்
ஹயாத் பாக்ஷ் பாக் அல்லது "வாழ்க்கையில் மிகச்சிறந்த பரிசுத்தோட்டம்" என அழைக்கப்படும் பெரிய முறைப்படியான தோட்டம் ஒன்று வடக்குப்பக்கத்தில் அமைந்துள்ளது, இந்தத் தோட்டம் கால்வாய் நீரை இரு சமக்கூறுகளாக பிரிக்கிறது. கால்வாயின் வடக்கு-தெற்கு பாதைகளின் முடிவில், காட்சி அரங்கு நிலைகள், மூன்றாவதாக கடைசி, பேரரசரான பகதூர் ஷா ஜாஃபரால் 1842 ஆம் ஆண்டு, குளத்தின் நடுவில் இரு கால்வாய்களும் சந்திக்கும் இடத்தில் கட்டப்பட்டன.
கோட்டையின் இன்றைய நிலை

பழைய டெல்லியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமாக செங்கோட்டை உள்ளது, இது ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துவருகின்றது. இந்த கோட்டையானது, ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான 15 ஆகஸ்ட் அன்று முதல், இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு சுதந்திரதினப் உரையாற்றுமிடமாகவும் இருந்து வருகிறது. இது பழைய டெல்லியின் மிகப்பெரிய நினைவுச்சின்னமாகவும் விளங்குகிறது.
ஒரேசமயத்தில், 3000க்கும் மேற்பட்ட மக்கள் டெல்லிக்கோட்டையின் வளாகத்தினுள் வசிக்க முடியும். 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் நடைபெற்ற பிறகு, கோட்டையானது பிரிட்டனால் ஆக்கிரமிக்கப்பட்டு மேலும் தங்கும் அரண்மனைகள் அழிக்கப்பட்டன. இந்தக் கோட்டை ஆங்கிலேய இந்திய இராணுவத் தலைமையிடமாக மாற்றப்பட்டது. இந்தக் கலகத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் உடனடியாக பகதூர் ஷா ஜாபர் விசாரணை செய்யப்பட்டார். மேலும் நவம்பர் 1945 இல், பிரபலமான இராணுவ நீதிமன்றத்தில் இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று அதிகாரிகளும் இங்குதான் விசாரிக்கப்பட்டனர். 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு, கோட்டையின் கட்டுப்பாடு இந்திய இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் 2003 இல், கோட்டையை இந்திய சுற்றுலாத்துறையிடம் இந்திய இராணுவம் ஒப்படைத்தது. இப்போது, சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக முகலாய வரலாற்றை விவரிக்கும் விதமாக மாலை நேரங்களில் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
டிசம்பர் 2000 இல் இந்தியா-பாகிஸ்தான் அமைதியை காஷ்மீரில் குலைக்கும் விதமாக, லக்சர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு, கோட்டையில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி ஊடகங்களினால் வெளியிடப்பட்டது.
மேலும் காண்க
- ஆக்ரா கோட்டை
- லாகூர் கோட்டை
புற இணைப்புகள்
குறிப்புகள்
- செங்கோட்டை வளாகம் - UNESCO உலக பாரம்பரிய அமைப்பு
- சர்ச்சை: 1639 இல் இந்த கோட்டையை கட்ட நினைத்தனர், 1638 இல், செங்கோட்டையின் திவான்-இ-ஆம்மில் ஜரோகாவில் பாரசீகத் தூதரிடமிருந்து வாங்குவதாக ஆவணங்களும் ஓவியங்களும் உள்ளன. இந்த ஓவியம் ஆக்ஸ்போர்டிலுள்ள போட்லியன் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது, 14 மார்ச் 1971 இல், த இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியா இதழில் (பக்கம் 32)இந்த ஓவியம் மீண்டும் வெளியிடப்பட்டது. எனினும், இந்த ஓவியம் லாகூரில் உள்ள ஜரோகாவையே காட்டுகிறது, டெல்லியை அல்ல. பார்க்க, ஹிஸ்டரி ஆப் முகல் ஆர்கிடெக்சர், ஆர். நாத், அபினவ் வெளியீடு, 2006