பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka rock shelters: தேவநாகரி: भीमबेटका पाषाण आश्रय) என்பவை இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும்.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பீம்பேட்கா பாறை வாழிடங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவு(iii)(v)
உசாத்துணை925
UNESCO regionஉலகப் பாரம்பரியக் களம்- ஆசியாவும் ஆஸ்திரலேசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2003 (27th தொடர்)

பீம்பெட்கா 750 குகை வாழிடங்களில் ஒன்று
பீம்பெட்கா குகையின் நுழைவாயில்
குகையின் உட்புறத்தோற்றம்.

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன.இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.[1][2] பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால(பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.[3]

பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.[4]

மேற்கோள்கள்

  • Madhya Pradesh A to Z, Madhya Pradesh State Tourism Development Corporation, Cross Section Publications Pvt. Ltd., New Delhi 1994

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.