கேவலாதேவ் தேசியப் பூங்கா
கேவலாதேவ் தேசியப் பூங்கா (Keoladeo National Park) இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது.
Keoladeo Ghana National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() Keoladeo Ghana National Park, Bharatpur, Rajasthan, India | |
![]() ![]() | |
அமைவிடம் | Bharatpur, இராச்சசுத்தான், India |
கிட்டிய நகரம் | Bharatpur, Rajasthan |
ஆள்கூறுகள் | 27°10′00″N 77°31′00″E |
பரப்பளவு | 2,873 hectare, 29 km2 |
நிறுவப்பட்டது | 10 மார்ச்சு 1982 |
வருகையாளர்கள் | 100,000 (in 2008)[1] |
நிருவாக அமைப்பு | இராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை |
வகை | இயற்கை |
வரன்முறை | X |
தெரியப்பட்டது | 1985 (9th session) |
உசாவு எண் | 340 |
State Party | இந்தியா |
பரத்பூர் மாவட்டம், இராஜஸ்தான் | Asia-Pacific |
Invalid designation | |
தெரியப்பட்டது | 1 அக்டோபர் 1981 |
இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 300 க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்படுகின்றன. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும்.
உலக பாரம்பரிய சின்னம்
1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.[2]
மேற்கோள்
- "NPS Annual Recreation Visits Report". National Park Service.
- பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா