சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்(Sundarbans National Park) இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள உயிர்க்கோளக் காப்பகமாகும். கல்கத்தாவிலிருந்து தென் கிழக்குத் திசையில் 100 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. உலகளவில் பெரும்பரப்பளவில் காணப்படும் சதுப்புநிலக்காடுகளைக் கொண்ட சுந்தரவனம் யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் (MAB)என்ற திட்டத்தின் கீழ் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொல்கத்தாவில் கங்கையின் கழிமுகத்தில் காணப்படும் இதன் பரப்பளவு 9630 ச.கி.மீட்டராகும். உலகளவில் புலிகளுக்கு உறைவிடம் தரும் மிகப்பெரிய சதுப்புநிலகாடுகள் இக்காப்பகத்தில் மட்டும் காணப்படுகிறது. வங்காளப்புலி காப்புப்பகுதி, சுந்தரவனம் தேசியப்பூங்கா ஆகியன இதன் மையமண்டலத்தில் அமைந்துள்ளன. மேலும் சச்னேகாலி வனவிலங்கு சரணாலயம், லோத்தியன் தீவு வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஹாலிடே தீவு வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களும் இக்காப்பகத்தினுள் உள்ளன.[1]
Sundarbans National Park | |
---|---|
সুন্দরবন জাতীয় উদ্যান | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() Tiger from Sundarbans Tiger Reserve | |
![]() ![]() | |
அமைவிடம் | தெற்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
கிட்டிய நகரம் | கொல்கத்தா |
ஆள்கூறுகள் | 21°56′42″N 88°53′45″E |
பரப்பளவு | 1,330.12 km2 (328,680 ஏக்கர்கள்) |
நிறுவப்பட்டது | 1984 |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு |
வகை | Natural |
வரன்முறை | ix, x |
தெரியப்பட்டது | 1987 (11th session) |
உசாவு எண் | 452 |
State Party | India |
Region | Asia-Pacific |
தாவரங்கள்
வெப்பமண்டல ஈரக்காடுகள் மற்றும் சதுப்புநிலக்காடுகள் (மாங்குரோவ் காடுகள்), பகுதி பசுமை மாறாக் காடுகள்(semi evergreen forest) ஆகியவற்றைக் கொண்ட இக்காப்பகத்தில் இதுவரை 120 வகையான பாசிகள், 25 வகையான கண்டல் தாவரங்கள் மற்றும 124 வகையான பூக்குந்தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அக்காந்தஸ், கண்டலா, நைப்பா, சோனரேசியா மற்றும் செரியோப்ஸ் போன்ற அரிய மற்றும் அழியும் தருவாயிலுள்ள தாவர இனங்கள் இக்காப்பகத்தினுள் உள்ளன.([2]) இப்பகுதிக்கே உரிய சுந்தரி எனும் மரம் காணப்படுகிறது
விலங்குகள்
விலங்கினங்களைப் பொறுத்தமட்டில் 163 வகைப் பறவைகள், 40 வகை பாலூட்டிகள், 56 வகை ஊர்வன, 165 வகை மீன்கள், 8 வகை இறால்கள், 67 வகை நண்டுகள் மற்றும் 23 வகை மெல்லுடலிகள் கண்டறியப்பட்டுள்ளன. புலி, முதலை, சிறுத்தை, போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன. வங்காளப் புலி இப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.
அச்சுறுத்தல்கள்
2001 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் மூன்று மில்லியன் மக்கள் இவ்வுயிர்க்கோளக் காப்பகப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.[1] இவர்கள் வன மற்றும் வனம் சார்ந்த தொழில்களையே சார்ந்துள்ளனர். மரம் வெட்டுதல், தேன் மற்றும் மெழுகு சேகரிப்பு ஆகிய்வை இவர்களின் வருமானம் தரும் தொழில்களாகும். அதிகப்படியான மீன் பிடிப்பு, இறால் பண்ணைகள் மற்றும் காடழிப்பு போன்றவை இக்காப்பகத்தின் பெரும் அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன.
மேற்கோள்கள்
- "Sundarbans National Park". யுனெஸ்கோ. பார்த்த நாள் ஏப்ரல் 10, 2015.
- "Sunderbanbiosphere reserve". சி. பி. ஆர். பார்த்த நாள் ஏப்ரல் 10, 2015.
வெளி இணைப்புகள்
- Official UNESCO website entry
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்- UNESCO Periodic Report