சாஞ்சி

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.[1]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவு(i)(ii)(iii)(iv)(vi)
உசாத்துணை524
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1989 (13th தொடர்)

வரலாறு

சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. இது புத்தரின் நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும். மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்கள் போன்ற அவர்களுக்குப் பின்வந்த அரசர்கள் மேலும் பல தூபிகளைக் கட்டினர். முதல் தூபிக்கு மெருகூட்டப்பட்டது. தூபியைச் சுற்றி நான்கு பக்கங்களில் தோரண வாயில்களை அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சத்தினர் அங்கு புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. அதன்பின்னர் அதன் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்துபோனது.

கி.பி. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.[2]

இதனையும் காண்க

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. Sanchi Stupa--A World Heritage Site
  2. அ. மங்கையர்கரசி (2018 சனவரி 3). "அழகிய சாஞ்சி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 சனவரி 2018.

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.