பௌத்த யாத்திரை தலங்கள்
பௌத்த யாத்திரை தலங்கள் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலும், நேபாளத்தின் தெற்கிலும் மற்றும் இலங்கை, கம்போடியா போன்ற தென்கிழக்காசியா நாடுகளில் பல பௌத்த புனித யாத்திரைத் தலங்கள் உள்ளன.[1]
நான்கு முக்கிய புனித தலங்கள்
கௌதம புத்தரின் நேரடித் தொடர்பான நான்கு முக்கிய பௌத்த யாத்திரைத் தலங்கள்;[2]
- லும்பினி: புத்தர் பிறந்த இடம், நேபாளம்
- புத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம் புத்தகயா, பிகார், இந்தியா
- சாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம், தாமேக் தூபி மற்றும் சௌகந்தி தூபி (உத்தரப் பிரதேசம், இந்தியா)
- குசிநகர்: புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம், (உத்தரப் பிரதேசம், இந்தியா)
மற்ற நான்கு புனிதத் தலங்கள்
- சிராவஸ்தி: புத்தர் அடிக்கடி பயணம் மேற்கொண்ட இடம்.
- ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம்.
- சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்
- வைசாலி: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம். மேலும் வஜ்ஜி நாட்டின் தலைநகரமும் ஆகும். வைசாலியில் புத்தரின் சாம்பல் மேல் கட்டிய நினைவுத் தூண் உள்ளது.
பிற நாடுகளின் புனிதத் தலங்கள்
மியான்மார்
- ஆனந்தா கோவில், ஷ்வேஜிகன் அடுக்குத் தூபி, பர்மிய அடுக்குத் தூபி
தென்கொரியா
- பலுக்சா, மும்மணி கோயில்கள்
மேற்கோள்கள்
- [http://www.vam.ac.uk/content/articles/b/buddhist-pilgrimage-sites-india/ Buddhist Pilgrimage Sites: India]
- The Buddha mentions these four pilgrimage sites in the Mahaparinibbana Sutta. See, for instance, Thanissaro (1998) and Vajira & Story (1998).
வெளி இணைப்புகள்
- Virtual Tour of Buddhist Pilgrimage Sites on Google Map (Interactive 360° View available on certain sites)
- Buddhist Pilgrimage (e-book - the eight major Buddhist sites in India)
- Buddhist Pilgrimage in India and Sri Lanka
- "Buddhist Pilgrimage". Asia. Victoria and Albert Museum. பார்த்த நாள் 2011-04-03.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.