தொட்டலகொண்டா

தொட்டலகொண்டா பௌத்த வளாகம் (Thotlakonda Buddhist Complex) (தெலுங்கு: తొట్లకొండ బౌద్ధ సముదాయం), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில், பீமுனிப்ப்பட்டினம் எனும் கிராமத்தின் சிறு மலைக்குன்றில் உள்ளது. தெலுங்கு மொழியில் தொட்டலகொண்டா என்பதற்கு பாறையில் குடைந்த கிணறு எனப்பொருளாகும்.


தொட்டலகொண்டா
తొట్లకొండ బౌద్ధ సముదాయం
சேனகிரி
பாதுக்காக்கப்பட்ட பௌத்த வளாகம்
தொட்டலகொண்டா பெரிய தூபி
தொட்டலகொண்டா
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°49′35″N 83°24′34″E
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகப்பட்டினம்
மொழிகள்
  அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகமைந்த நகரம்விசாகப்ப்பட்டினம்

கலிங்க நாட்டில் புகழ்பெற்றிருந்த பௌத்த தலமான தொட்டலகொண்டாவின் கடற்கரை பட்டினமான கலிங்கப்பட்டினத்திலிருந்து, கிமு மூன்றாம் நூற்றாண்டில், பௌத்த சமயம் இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு பரவியது.

ஆந்திர மாநில அரசு 1988 - 1993களில் இவ்விடத்தில் அகழாய்வு செய்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஈனயான பௌத்த வளாகம் விகாரையுடன் கூடிய தூபிகள் கண்டெடுக்கப்பட்டது. இப்பௌத்த தொல்லியல் களத்தின் தெற்கில் பிக்குகள் மழை நீரைச் சேரிக்கும் வகையில், பாறையைக் குடைந்து கிணற்றை வெட்டியுள்ளனர்.

அகழாய்வில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட 12 கல்வெட்டுக்கள் கிடைத்தது. இக்கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் இம்மலையை முன்னர் சேனகிரி என்று அழைக்கப்பட்டுள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய தொட்டலகொண்டா பௌத்த வளாகம் நன்கு செயல்பட்டுள்ளது.

தொட்டலகொண்டா அருகே பவிகொண்டா எனும் பௌத்த தொல்லியல் களம் உள்ளது.

தொட்டலகொண்டா பௌத்த நினைவுச் சின்னங்கள்

தொட்டலகொண்டா பௌத்த வளாகத்தின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காணக

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.