புத்தகயா

புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா (ஹிந்தி: बोधगया), இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பிக்குகள் தங்கும் பெரிய விகாரம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் குசிநகர், லும்பினி, சாரநாத், கபிலவஸ்து, புத்த கயா, சாரநாத் மற்றும் சாஞ்சி ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது..

போத்காயா
  நகரம்  
போத்காயா
இருப்பிடம்: போத்காயா
, பீகார் , இந்தியா
அமைவிடம் 24°41′42″N 84°59′29″E
நாடு  இந்தியா
மாநிலம் பீகார்
மாவட்டம் கயா
ஆளுநர் ராம் நாத் கோவிந்த்[1]
முதலமைச்சர் நிதிஷ் குமார்[2]
மக்களவைத் தொகுதி போத்காயா
மக்கள் தொகை 30 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மகாபோதி கோயில்

பெளத்த சமயத்தை பின்பற்றும், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளின் சார்பாக புத்தர் கோயில்கள் இங்கு கட்டப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.