பவசக்கரம்

பவசக்கரம்(பாளி:பவசக்க, சமஸ்கிருதம்:भवचक्र) என்பது சம்சாரத்தின் சிக்கலான வட்டவடிவான சித்தரிப்பாகும். இது பெரும்பாலும் திபெத்திய பௌத்தத்தில் பயன்பாட்டில் உள்ளது. சம்சாரம் என்பது பிறப்பு இறப்பின் சுழற்சியாகும். இந்த சுழற்சியைப் போதி நிலையை அடைவதன் மூலமே நிறுத்த இயலும். பவ(भव) என்ற வடமொழிச்சொல்லுக்கு இருத்தல், பிறப்பு,தோற்றம் என பல்வேறு பொருள்கள் உண்டு

திபெத்திய பவசக்கரம்

பௌத்தத்தின் படி, உயிர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்படுவது கர்மத்தின் பலனாகத்தான். ஒருவரின் கர்மம் தான், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒருவரை பிறக்கச்செய்கிறது. இந்த மண்டலங்களில் இருந்து விடுபடுவதான பௌத்தத்தின் நோக்கமாகும்.

பவசக்கரம் சிலசமயம் ஐந்து பகுதிகளுடன் காணப்படும். எனினும் சமீபத்திய மற்றும் பொதுவாக ஆறு பகுதிகளே காணபப்டுகின்றன

பவசக்கரத்தின் ஆறு குறுக்குகம்பிகளுக்கு நடுவில் இருக்கும் பகுதிகள் போதியை உணராத நிலையினை குறிக்கிறது

பவசக்கரத்தின் பெயர்கள்

பவசக்கரத்தின் பெயர்கள்

  • ஜீவசக்கரம்
  • புனர்ஜென்ம சக்கரம்
  • சம்சார சக்கரம்
  • துக்கசக்கரம்

பவசக்கரத்தின் பகுதிகள்

பின்னணி

பவசக்கரத்தை பொதுவாக மிகவும் உக்கிரமான உருவம் கொண்டவரின் கைகளிலோ அல்லது தாடைகளின் நடுவிலோ, கால்களிலோ காணப்படும். இந்த உருவமே சக்கரத்தை சுழற்றுவதாக நம்பப்படுகிறது. பொதுவாக, யமன் இவ்வாறு பயங்கரமாக பவசக்க்ரத்தை சுற்றுவதாக சித்தரிப்பதுண்டு.

பவசக்கரத்தின் மேல் இடது மூலையிலும் மற்றும் மேல் வலது மூலையிலும் ஒரு உருவம் எப்போதும் காணப்படும். இந்த உருவம் அல்லது சின்னம் ஒவ்வொரு சித்தரிப்புக்கும் வேறுபடாலம். பொதுவாக சந்திரன், புத்தர் அல்லது போதிசத்துவர் இவ்வாறாக சித்தரிக்கப்படுவர். சில பௌத்த சின்னங்களும்

சக்கரத்தின் வெளி விளம்பு

பவசக்கரத்தின் வெளி விளிம்பு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு பகுதிகளுக்கு பன்னிரண்டு நிதானங்களின் பெயர்கள் இடப்படுகின்றன

ஆறு உலகங்கள்

இந்த சக்கரம் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பகுதிகளும் கீழ்க்கண்ட ஆறு லோகங்களை குறிக்கும்

  1. தேவலோகம்
  2. அசுரலோகம்
  3. மனுஷ்யலோகம்
  4. மிருகலோகம்
  5. பிரேத லோகம்
  6. நரகலோகம்

எப்போதுமே தேவர்களின் உலகம் சக்கரத்தின் உச்சியில் இருக்கும். அசுரர்களின் உலகமும், மானுட உலகமும் சக்கரத்தின் மேல் பாதியில் தேவலோகத்தினை ஒட்டி, எதிரெதிர் திசையில் இருக்கும். ஆனால் எது வலது புறம், மற்றும் எது இடது புறம் என்பது மாறுபடும். மிருகங்களின் உலகமும் பிரேதங்களின் உலகமும் சக்கரத்தின் கீழ் பாதியில், அசுரலோகத்தினை ஒட்டி காணப்படும். மிருகலோகம் மற்றும் பிரேத லோகத்தின் இடையில், சக்கரத்தின் அடிப்புறத்தின் நரகம் காணப்படும்

சில சமயம், தேவலோகமும், அசுரலோகமும் ஒன்றினைக்கப்பட்டு, சக்கரம் வெறும் ஐந்து பகுதிகளுடன் மட்டும் கூட காணப்படும்

இந்த ஆறு மண்டலங்களிலும் , ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவர் அம்மண்டலங்களில் உள்ள உயிர்கள் நிர்வாணம் அடைவதற்காக உபதேசித்துக்கொண்டிருப்பதாக சித்தரிக்கப்படும்

சக்கரத்தின் மையப்பகுதி

சக்கரத்தின் மையப்பகுதியின்(hub) வெளிப்பகுதி(rim) கறுப்பு மற்றும் வெள்ளை நிறமாக பிரிக்கப்பட்டுள்ளது. பொதுப்படையான(Exoteric) ஆய்வுரைகளில் வெள்ளை நிறம், போதியையும் ஆனந்தத்தையும் நோக்கிய பாதை என்றும், இருண்ட பகுதி உயிர்கள் நரகத்தை நோக்கி செல்வதை குறிப்பிடவன என சொல்லப்பட்டுள்ளது.

சக்கரத்தின் மையப்பகுதியில், பௌத்தத்தின் மூல கிளேஷம்(மூன்று விஷங்கள்) முறையே பன்றி, நாகம், சேவல் ஆகவோ அல்லது ஆனந்த சக்கரமாகவோ குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  • Donath, Dorothy C. (1971). Buddhism for the West: Theravāda, Mahāyāna and Vajrayāna; a comprehensive review of Buddhist history, philosophy, and teachings from the time of the Buddha to the present day. Julian Press. ISBN 0-07-017533-0.
  • Epstein, Mark (1995). Thoughts Without a Thinker: Psychotherapy from a Buddhist Perspective. BasicBooks. ISBN 0-465-03931-6.
  • Gethin, Rupert (1998). Foundations of Buddhism. Oxford: Oxford University Press. ISBN 0-19-289223-1.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.