மௌத்கல்யாயனர்


மௌத்கல்யாயனர் (Maudgalyāyana) {{இந்தி|मौद्गल्यायन}} (கி மு 568 - 484) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஆனந்தருக்கு அடுத்து இரண்டாவதாக விளங்கியவர். கௌதம புத்தருக்கு இடது கையாக விளங்கியவர்.

மௌத்கல்யாயனர்
சமயம்பௌத்தம்
சுய தரவுகள்
தேசியம் இந்தியன்
பிறப்புகோலிதன்
கி மு 568
கோலிதா கிராமம், மகதம்
இறப்புகி மு 484 (84-வது வயதில்) [1]
காலசிலா குகை, மகதம்
வகித்த பதவிகள்
பதவிவாமசாவகன் (புத்தரின் இடது கை) முதன்மைச் சீடர்களில் ஆனந்தருக்கு அடுத்த இரண்டாமவர்.
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்
மாணவர்கள்இராகுலன் முதலானவர்கள்

வேதியர் குடியில் பிறந்த இவரின் தாயார் பெயர் மொக்கலீ ஆகும். [2] புத்தத்தன்மை பெற்றவர்களில் சுபூதி மற்றும் சாரிபுத்திரர் உடன் இவரும் ஒருவராவார். தெய்விக ஆற்றல் பெற்ற புத்தரின் சீடர்களில் ஒருவர். மற்றவர் சாரிபுத்திரர் ஆவார்.

கௌம புத்தரின் மகன் ராகுலனுக்கு குருவாக அமைந்தவர்.

வயது முதிர்வின் போது புத்தரிடமிருந்து விடை பெற்று, தான் பிறந்த மகதத்தின் கோலிதா கிராமத்திற்கு திரும்பிச் செல்கையில் காலசிலா நகரத்தில் உள்ள ஒரு குகை அருகே கள்வர்களின் வாளால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. http://www.accesstoinsight.org/lib/authors/hecker/wheel263.html#ch1
  2. P. 66 Buddha and Buddhist synods in India and abroad By Amarnath Thakur

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.