சாரிபுத்திரர்

சாரிபுத்திரர் (Sāriputta) (பாலி) & சமசுகிருதம் Śāriputra) புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராவர். நாலந்தாவில் பிறந்து இறுதியில் நாலந்தாவிலே இறந்தவர்.

சாரிபுத்திரர்
சுய தரவுகள்
பிறப்புகி மு 568
ராஜகிரகம்
இறப்புகி மு 484 (84-வது வயதில்)
நளகா
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்

வாழ்க்கை

சாரிபுத்திரர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர்.[1] ஞானத்தை அடைய ஆர்வமாக இருந்த சாரிபுத்திரர் இல்லறத்தை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டவர். புத்தரின் ஞானத்தால் ஈர்க்கப்பட்ட சாரிபுத்திரர், புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.

பௌத்த தர்மத்தை உபதேசிப்பதிலும் விளக்குவதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றதாலும், பௌத்த சமய அபிதம்மம் (Abhidharma) தத்துவத்தை உருவாக்கியதற்காக சாரிபுத்திரருக்கு, தரும சேனாதிபதி (General of the Dharma) விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

கௌதம புத்தர், சாரிபுத்திரரை தன்னுடைய ஆன்மிக மகன் என்றும் தன்னுடன் ஆன்மிக தர்மச் சக்கரத்தை சுழற்றுவதில் தனது தலைமை உதவியாளர் என அறிவித்தார்.[2]

இறப்பு

பாலி மொழி பௌத்த நூல்களின் படி, கௌதம புத்தர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சாரிபுத்திரர் தான் பிறந்த நாலந்தா நகரத்திலேயே, கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார்.[3]

நினைவுத் தூண்

நாலந்தாவில் பிறந்து - இறந்த சாரிபுத்திரரின் நினைவுத் தூண்
சாரிபுத்திரர் பயன்படுத்திய பூஜை பொருட்கள்

சாரிபுத்திரர் இறப்பதற்கு முன் மகத நாட்டில், தான் பிறந்த நாலந்தாவிற்குச் சென்று, தன் தாயை பௌத்த சமய தீட்சை வழங்கி பிக்குணி ஆக்கினார். கௌதம புத்தரின் அறிவுரைப் படி இறந்த சாரிபுத்திரரின் சடலம் எரிக்கப்பட்டப் பின்னர் சாம்பலை மகத மன்னன் அஜாதசத்ருவுக்கு அனுப்பினார். கி. மு. 261-இல் சாரிபுத்திரரின் சாம்பலை வைத்து நாலந்தாவில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்:


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.