இரிம்புச்சே

இரிம்புச்சே (உரோமன் எழுத்தில் Rinpoche, Rimboche, Rinboqê, Tibetan: རིན་པོ་ཆེ་, Wylie: rin-po-che, ZYPY: Rinboqê ) என்பது திபெத்திய மொழியில் வழங்கப்பெறும் பெருமைய முன்னொட்டு. இதன் பொருள் இரத்தினம் போல் அருமை மிக்கது என்பதாகும். இதனை மாந்தர்களுக்கும், இடத்துக்கும், ஒரு பொருளுக்கும் சேர்த்து வழங்கலாம்.

இச்சொல் திபெத்திய புத்தமதத்தில் மறுபிறவியாகக் கருதப்படுபவர்களுக்கும், முதியவர்களுக்கும் மிகுந்த மதிப்பு உள்ளவர்களாகக் கருதப் படுபவர்களுக்கும், கற்று முதிர்ந்தவர்களுக்கும், முதிர்ந்த இலாமாக்களுக்கும், தர்மத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படுத்துகின்றார்கள். இதனைத் துறவியர் மடத்தலைவர்களுக்கும் (abbot) வழங்குவார்கள்.

இதனையும் பார்க்கவும்

  • இரிம்புச்சேக்கள்- இரிம்புச்சே என அழைக்கப்பட்ட அல்லது அழைக்கப்படும் முன்னர் இருந்த, அல்லது இப்பொழுதும் இருக்கும் மெய்யியல் ஆசிரியர்களின் சிறு பட்டியல்
  • துக்குலு, முன்பிருந்த திபெத்திய புத்தமதத்தைப் பின்பற்றிய ஒருவரின் மறுபிறவியாகக் கருதப்படுபவர்.
  • கைலாச மலை - இது பலவிடங்களில் திபெத்திய மொழியில் கங்கு இரிம்புச்சே (Gang Rinpoche) என்றழைக்கப்படுகின்றது.


நூல்துணை

  • The New Tibetan-English Dictionary of Modern Tibetan by Melvyn C. Goldstein, Editor ISBN 0-520-20437-9

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.