சங்காசியா


சங்கிசா அல்லது சங்காசியா (Sankassa) பண்டைய இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரமாகும். கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.[1]

சங்கஸ்சா
Shown within India# India Uttar Pradesh
சங்காசியா (Uttar Pradesh)
இருப்பிடம்சிராவஸ்தி, பருகாபாத், உத்தரப் பிரதேசம்
ஆயத்தொலைகள்27°20′02″N 79°16′16″E
வகைSettlement
TypeC

அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார். 1842இல் அலெக்சாண்டர் கன்னிங்காம் சங்காசியா பௌத்த விகாரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுத்தார். பௌத்த சமயத்தவர்களுக்கு இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.

அமைவிடம்

பண்டைய சங்காசியா நகரமானது உத்திர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் தற்கால காம்பில்யம் மற்றும் கன்னோசி நகரங்களுக்கிடையே, காளி ஆற்றின் கரையில் அமைந்த சங்கிஸ்சா வசந்தபுரம் என்ற ஊர் என தற்போது அறியப்பட்டுள்ளது. சங்காசியா, பதேகர் நகரத்திலிருந்து 23 மைல் தொலைவில் உள்ளது.

இராமாயணத்தில் சங்காசியா நகரம்

விதேக மன்னர் சனகரின் தம்பி குசத்துவஜன் ஆண்ட பகுதிகளில் ஒன்று சங்கஸ்சிய நகரம் என இராமாயணம் குறித்துள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.