லௌரியா-ஆராராஜ்

லௌரியா-ஆராராஜ், இந்தியாவின் பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த ஊராகும். பண்டைய லௌரியா ஆராராஜ் நகரம், இந்திய-நேபாள எல்லையின் அருகில் உள்ளது.

அசோகரின் லௌரியா-ஆராராஜ் தூபி
செய்பொருள்மெருகூட்டப்பட்ட மணற்கல்
காலம்/பண்பாடுகிமு 3-ஆம் நூற்றாண்டு
இடம்லௌரியா-ஆராராஜ், கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
தற்போதைய இடம்லௌரியா-ஆராராஜ், பிகார்


லௌரியா ஆராராஜ் நகரம், கிமு 299 - 200ல் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூபியால் புகழ் பெற்றது. இங்குள்ள தூபி மெருகேற்றிய வலுவான மணற்கல்லில் செதுக்கப்பட்டடது. இத்தூபியின் உயரம் 36.6 அடியும், சுற்றளவு 3.6 அடியும் கொண்டது.[1]

தூபியின் உச்சியில் இருக்க வேண்டிய சிங்கமுகச் சிற்பம் இல்லை எனினும், அசோகரின் ஆறு கல்வெட்டுக் குறிப்புகள் இத்தூணில் காணப்படுகிறது.[2]

இத்தூபியில், மௌரிய வம்ச மன்னர்களின் வரலாற்று குறிப்புகள் உள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இத்தூபியை பராமரிக்கிறது.

பின்னனி

அசோகர் கலிங்கப் போரின் முடிவில் போர்களத்தில் கண்ட காட்சிகளைக் பார்த்து மிகுந்த துயரம் கொண்டார். பின் பௌத்த சமயத்தில் சேர்ந்து, மௌரியப் பேரரசு முழுவதும் கௌதம புத்தர் அருளிய தரும நெறிகளை, பிக்குகள் மூலம் பரப்பினார். பௌத்த உபாசகர்கள் வாழ்க்கை பின்பற்ற வேண்டிய தரும நெறிகள் குறித்து பேரரசின் அனைத்து திசைகளில் பாறைகளிலும், தூபிகளிலும், குகைச் சுவர்களிலும், அந்தந்தப் பகுதி மக்களின் வட்டார மொழிகளில் எழுதி வைத்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Lauriya Araraj
  2. Buddhist Architecture, Huu Phuoc LeGrafikol, 2010 p.38

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.