சாரநாத்

சாரநாத் (Sarnath) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார்.[1][2]

சாரநாத்
Sarnath

सारनाथ
சாமாத, மிரிகதாவ,
மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான
நகரம்
தாமேக் தூபி, சாரநாத்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மொழிகள்
  அதிகாரபூர்வம்இந்தி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
சாரநாத் குன்றில் அமைந்த சௌகந்தி தூபி

இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயனசனாதரர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

சாரநாத் (மான்களின் கடவுள்) என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிப்பத்தான என்ற பெயர் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.[3]

குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது.

இதனையும் காண்க

இரட்டை சிங்கப் போதிகைகள், சாரநாத்

படக்காட்சியகம்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.