கோலியர்

கோலியர்கள் (Koliyas) பண்டைய பரத கண்டத்தின், தற்கால நேபாள நாட்டின், லும்பினி மாவட்டத்தின் சில பகுதிகளை ஆண்ட சூரிய வம்சத்தின் இச்வாகு குல சத்திரியர்கள் ஆவார். [1] கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் சாக்கியர்களுடன் மணவினை தொடர்புடையவர்கள். சாக்கிய நாட்டரசர் சுத்தோதனர் கோலிய நாட்டின் இளவரசிகளான மாயா தேவி மற்றும் மகாபிரஜாபதி கௌதமியை மணந்தவர். கௌதம புத்தரின் மனைவி யசோதரையும் கோலிய நாட்டு இளவரசியாவர். ரோகிணி ஆற்று நீருக்காக கோலியர்களும் சாக்கியர்களும் போரிட்டனர்.

கோலிய நாட்டு இளவரசி யசோதரை மற்றும் ராகுலனுடன் (இடப்பக்கம்-அடியில்) கௌதம புத்தர் - அஜந்தா குகைகள்

வரலாறு

சாக்கியர்களும், கோலியர்களும் ரோகிணி ஆற்றின் இருமருங்கிலும் ஆட்சி புரிந்தவர்கள். இவ்விரு அரச குலத்தினரும் கோசல நாட்டிற்கு அடங்கிய தன்னாட்சி கொண்ட குடியரசுத் தலைவர்கள் ஆவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.