சத்திரியர்

சத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், கிருஷ்ணன் ஆகியோரும், புத்த சமய நிறுவனரான கௌதம புத்தர், சமண சமயத்தைத் தோற்றுவித்த சத்திரியர் ஆகியோரும் சத்திரியர்களே.

கௌதம புத்தர் புத்த சமய நிறுவனரான கௌதம புத்த சத்திரியராக பிறந்தவர்

சத்திரியர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர். தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினர் மட்டுமே சத்திரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.