தேவர்கள்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்கள் என்பவர்கள், பதினான்கு கணங்களில் ஒரு இனம் ஆவார். இவர்கள் தேவலோகத்தில் வசிக்கின்றார்கள். இவர்களின் தலைவனாக இந்திரனும், குருவாக பிரகஸ்பதியும் இருக்கிறார்.

தேவர் உருவங்களைக் காட்டும் கோயில் சிற்பம்

தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் அட்டதிக் பாலகர்கள் எனும் எட்டு திசை காவலர்கள் உள்ளார்கள்.

சொற்பிறப்பு

எண்ணிக்கை

முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது சொல்வழக்காகும். இதன் மூலம் தேவர்களின் எண்ணிக்கையை கொள்ளலாம். ஆதித்தர், உருத்திரர், அஸ்வினி தேவர், வசுக்கள் என தேவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் ஆதித்தர் என்பவர்களில் பன்னிரெண்டு நபர்கள், உருத்திரர் என்பவர்கள் பதினொரு நபர்கள், அசுவினி தேவர் என்பவர்கள் இருவர். இவர்களோடு வசுக்கள் எட்டு நபர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதாகக் கொள்ளப்படுவதால், மொத்தமாக முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப்படுகிறார்கள். [1]

சங்க இலக்கியங்களில் தேவர்

  • தேவர்கள் பிறரது சொல்லுக்குக் கட்டுப்படாமல் தம் விருப்பம்போல் செயல்படுவர். [2]
  • கொடையாளிகள், வீரர்கள் முதலானோர் இறந்தபின் தேவர் உலகம் சென்று வாழ்வார்களாம். [3]
  • இந்திரன் 'தேவர் கோமான்' எனக் குறிப்பிடப்படுகிறான். [4]
  • 'தேவர் கோட்டம்' என்பது இந்திரன் கோயில். [5]
  • தேவி [6], தேவியர் [7] என்னும் சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் மனைவியைக் குறிக்கும்.
  • தேவர்களை முன்னிலைப்மடுத்தும்போது 'தேவிர்காள்' என விளிப்பர். [8]
  • ஈகைப்பண்பு கொண்டவனை ஒருபாடல் தேவாதிதேவன் என்று குறிப்பிடுகிறது. [9]

தேவர் என்னும் சொல்

  • தே < தேன் [10] = இனிமை
  • தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்
  • இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும்.
  • தே+அர்=தேவர்
  • எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது
  • தேவர் - பலர்பால், தேவன் - ஆண்பால், தேவி - பெண்பால்

அடிக்குறிப்பு

  1. [http://temple.dinamalar.com/news_detail.php?id=2340 முப்பத்து முக்கோடி தேவர்கள் - ஆன்மீக வகுப்பறை - தினமலர் தளம்
  2. தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
    மேவன செய்து ஒழுகலான் (திருக்குறள் 1073)
  3. நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தினன் - புறநானூறு 228
  4. சிலப்பதிகாரம் 2-47, 5-66, மணிமேகலை 28-166
  5. சிலப்பதிகாரம் 29-21-4, மணிமேகலை 21-120
  6. பதிற்றுப்பத்து பதிகம் 4, 6, 8
  7. மணிமேகலை 12-42
  8. சிலப்பதிகாரம் 9-14
  9. ஈத்து உண்பான் தேவாதி தேவனாத் தேறு (ஏலாதி 32)
  10. கோ < கோன், மா < மான், ஆ+பால்=ஆன்பால் என்றெல்லாம் வருவது போன்றது இது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.