முப்பத்தி மூன்று தேவர்கள்

முப்பத்தி மூன்று தேவர்கள் (Thirty-three deities or Tridasha (சமசுகிருதம் त्रिदश tridaśa "three times ten") வேதகால ஆரிய மக்களின் தேவர்கள். அவர்களில் முதன்மையானவர்கள் 12 ஆதித்தியர்கள் (Ādityas),[1] 8 வசுக்கள், [2] 11 ருத்திரர்கள்,[3] [4] இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரைச் சேர்த்து முப்பத்தி மூன்று தேவர்கள் என ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முப்பத்தி மூன்று தேவர்களையே தற்போது முப்பத்தி முக்கோடி தேவர்கள் என அறியப்படுகிறது.

பன்னிரு ஆதித்தியர்கள்

  1. வருணன் ( Varuna) [5]
  2. மித்திரன் (Mitra)[6]
  3. அர்யமான் (Aryaman) [7]
  4. பகன் (Bhaga) [8]
  5. தட்சன் (Daksha)[9]
  6. அன்சா (Ansa (Hinduism) [10]
  7. துவஷ்ட்ரி (Tvashtri)
  8. பூசன் (Pushan) [11]
  9. விவஸ்வான் ( Vivasvan) [12]
  10. சாவித்தர்
  11. இந்திரன்
  12. விஷ்ணு

பதினோரு ருத்திரர்கள்

  1. ஆனந்தம் (பேரின்பம்)
  2. விஞ்ஞானம் (பகுத்தறிவு)
  3. மனம் (எண்ணங்கள்)
  4. பிராணன் (மூச்சுக் காற்று அல்லது வாழ்க்கை)
  5. வாக் (நா வன்மை)
  6. ஈசானன், (உலகை ஆட்சி செய்பவர்)
  7. தத்புருஷம், (பரம் பொருள்)
  8. அகோரர் (கோபமற்றவர்)
  9. வாமதேவம் (அமைதியானவர்)
  10. சத்யோஜாதம் (நினைத்தவுடன் பிறப்பவர்) (Sadyojāta)
  11. ஆத்மன்

எட்டு வசுக்கள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.