வீடுபேறு

வீடுபேறு அல்லது மோட்சம் என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் சொல்கிறது. அவையாவன: தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் {விதேக முக்தி} ஆகும். இந்த இறுதி இலக்கான வீடுபேற்றுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான இல்லறம் அவசியமானது. ஏனெனில் இல்லறத்தில் கர்ம யோக வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்குத் தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான வீடுபேறு என்னும் மறுபிறவி இல்லாத நிலையான விதேக முக்தியை அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே, விடுபட்ட நிலையினை அடைய இயலுமென்பதும் நம்பிக்கை.


இந்து சமய
கருத்துருக்கள்
பிரம்மம்
ஆத்மா
மாயை
கர்மா
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
மோட்சம், வீடுபேறு
அவதாரக் கோட்பாடு
லீலை
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தாந்திரீகம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்
ஜெபம்

வீடு அல்லது வீடுபேறு என்பது இந்துக் கருத்துருவில் சொர்க்கம் புகுதல் எனப்பொருளுடையது. பொதுப்பயன்பாட்டில் "வீடுதல்" என்பது "மரணித்தல்" அல்லது "அழித்தல்" எனப் பொருள்படும்.

எ.கா: கம்பராமாயணத்தில் சீதையைத் தேடி இலங்காபுரி வந்த அனுமான் தேடி இவ்வழி கண்பனேன் தீருமென் சிறுமை மற்றிவ் வீடுவேன் இவ்விலங்கன் மேல் இலங்கையை வீட்டு என்கிறான்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.