அசுவமேத யாகம்


அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய வேள்வியாகும். ஒரு நாட்டின் அரசன் தனது அரச குதிரையை தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப்பகுதியில் கட்டி நாடு முழுவதும் திரிய விடுவான். அந்தக் குதிரையுடன் அவனோ அல்லது அவனது அரச பிரதிநிதியோ பெரும்படையுடன் உடன் செல்வார்கள். அதைப் பிடித்து மடக்கும் வேற்று அரசன் மேல் படையெடுப்பு நடத்தி அவனை வெற்றிகொண்ட பின் குதிரை மேலும் தொடர்ந்து செல்லும், மற்ற மன்னர்களெல்லாம் அவனது ஆட்சியை ஏற்றுக் கொண்ட பிறகு “சக்கரவர்த்தி” என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்வான்.

பாண்டவர்களின் குதிரை வேள்வியின்போது குதிரை பல நாடுகளூடாக நடந்து செல்வதையும், அதைத் தொடர்ந்து அருச்சுனனும் படையினரும் செல்லும் காட்சி.
குதிரை வேள்வி குறித்துக் கண்ணன் ஆலோசனை கூறுதல்.

தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

அயோத்தி அரசன் தசரதன் அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான். இந்த யாகத்தை நடத்துவதற்காக ருசிய சிருங்கர் அழைத்து வரப்பட்டார். அவர் நடத்தி முடித்த அசுவமேத யாகத்திற்குப் பின் தசரத மகாச்சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்.[1]

தருமன் நடத்திய அசுவமேத யாகம்

குருச்சேத்திரப் போருக்குப் பின் தருமன் “சக்கரவர்த்தி” பட்டத்திற்காக அசுவமேத யாகம் நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அருச்சுனன் பெரும் படையுடன் சென்று வெற்றி பெற்று யாகம் நடத்தி சக்கரவர்த்தியானான்.[2]

தமிழ் நாட்டில் சாதவாகன அரசர்கள்

சாதவாகன அரசர்களில் மூன்றாவது மன்னரான முதல் சாதகர்ணி தனது ஆட்சி எல்லைப்பகுதியை தக்காணத்தின் வடக்குப்பகுதியில் நிலை நிறுத்தியதோடு அல்லாமல் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். இதற்காக இரண்டு அசுவமேத யாகம் நடத்தியதாக அறியப்படுகிறது.[3]

சான்றாவணம்

  1. வியாசர் விருந்து-மூதறிஞர் இராஜாஜி- ஆர்ய சமாஜம்-வெளியீடு-1952- திருவல்லிக்கேணி-சென்னை-
  2. Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK
  3. தென் இந்திய வரலாறு -தெ. பொ. மீனாட்சிசுந்தரன்-சாமு பப்ளிகேஷன்ஸ் வெளியீடு-1964- பத்மாவதி அவென்யு-சென்னை-96.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.