பிராயச்சித்தம்

பிராயச்சித்தம் என்பது இந்து தொன்மவியலின் படி பாவத்திற்கு செய்யப்பட வேண்டிய பரிகாரமாகும். மிகப்பெரிய பாவமாக கருதப்படும் கொலைப் பாவமானது பிரம்மஹத்தி தோசம் என்று அழைக்கப்படுகிறது.[1] அத்தகைய பாவத்திற்கும் சிவபெருமானை சரண்புகுவதால் பிராயச்சித்தம் ஏற்படுமென இந்து நூல்கள் கூறுகின்றன.

பிரம்மஹத்தி தோச பரிகாரம்

ஆதிபகவானான சிவபெருமானை வணங்குவதால் பாவங்களில் பெரும் பாவமான பிரம்மஹத்தி தோசமும் அகலும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. இதற்காக இந்திரன், கால பைரவர், ராமர் ஆகியோரின் பிரம்மஹத்தி தோசங்கள் நீங்கிய புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன.

சிவபெருமான் படைப்பு தொழிலுக்காக பிரம்மாவினையும், காக்கும் தொழிலுக்காக திருமாலையும், அழிக்கும் தொழிலுக்காக ருத்திரனையும் படைத்தார். அதனையறியாமல் பிரம்மாவும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். அதனையறிந்த சிவபெருமான் இலிங்கோத்பவ மூர்த்தியாக மாறி தனது அடிமுடியைக் காணுமாறும், அதில் வெற்றிபெறுபவர்களே பெரியவர் என்றும் கூறினார்.

ஆதிநாதனின் அடிமுடியை காணுதல் இயலாதென உணர்ந்த திருமால் சிவபெருமானிடம் சஞ்சமடைந்தார். ஆனால் பிரம்மா சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவுடன் இணைந்து பொய்யுரத்தமையால் சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து பிரம்மாவின் தலைகளில் ஒன்றை கொய்ய உத்தரவிட்டார். அவ்வாறு பிரம்மாவின் தலையை கொய்தமையால் கொலைப்பாவம் பைரவரை பற்றியது. பைரவர் சிவபெருமானை வாராணாசியில் வழிபட்டு அப்பாவத்திலிருந்து விடுபட்டார்.

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=11106&cat=3 பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் பரிகாரங்கள் தினகரன் 2016-01-06

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.