அரக்கர்

அரக்கர் அல்லது ராட்சதர் அல்லது அசுரர் (rakshasa) என்பவர் இந்திய தொன்ம கதைகளில் வரும் ஒரு கற்பனை இனத்தவர். இந்து மற்றும் புத்த சமய இலக்கியங்களில் காசிப முனிவருக்கும்] - தட்சப் பிரஜாபதியின் மகள் திதி தேவிக்கும் பிறந்தவர்களே அரக்கர்கள் ஆவார்.

அரக்கனை உருவகப் படுத்திய ஒரு கலையலங்கார உருவம்-கர்நாடகம்

அரக்கர் என்ற சொல் சில இடங்களில் அசுரர் எனவும் பயன்படுத்தப்படுவதுண்டு. அரக்கன் எனும் சொல்லாடல் இராமாயணத்தில் காணப்படுகின்றது - இலங்கையின் மன்னனான இராவணன் அரக்கன் என்று அழைக்கப்படுகிறான். கும்பகர்ணன், விபீடணன், சுபாகு, மாரீசன், இந்திரசித்து ஆகியோர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அரக்கர்கள். மகாபாரதத்தில் இடும்பன், கடோத்கஜன், பகாசுரன் போன்ற அரக்கர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். புத்த சமய இலக்கியங்களிலும் மாறன், இராவணன் போன்ற அரக்கர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இந்து தொன்மவியலின் அடிப்படையில் அரக்கர்கள் என்பவர் பதினெட்டு கணங்களில் ஒரு குழுமம் ஆவார். இவர்களின் குருவாக சுக்கிராச்சாரி உள்ளார். மிகுந்த கடுந்தவத்தினால் அதிக சக்தி பெறும் அரக்கர், அரசனாக ஆகிறார். இறைவன் மூலமாக அரக்கரசர் அழிந்த பின்பு, அடுத்த சக்தி வாய்ந்த நபர் அந்த அங்கிகாரத்தினைப் பெறுகிறார். இவர்கள் சிவபக்தர்களாக இருப்பதனால் சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுகின்றார்கள்.

இந்திய இதிகாசங்களில் ஒரு இனத்தினரை அல்லது ஒரு மரபினரை தாழ்வானப் பார்வையுடன் சித்தரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட ஒரு சொல்லாடலாக மட்டுமே "அரக்கன்" எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. "அரக்கன்" எனும் சொல் குறிப்பாக தென்னிந்திய மற்றும் பழங்கால இலங்கை மக்களான திராவிட மரபினரை, வடயிந்திய ஆரிய மரபினர் தாழ்வாக அழைக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்பது ஒரு சாரரின் கருத்தாகும். அரக்கன் எனும் சொல்லாடல், கிரேக்கரும் மற்றும் உரோமரும் ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கைப்பற்ற முனைந்த வேளைகளில், அவர்களுக்கு பெரும் சவாலாக எதிர்த்து போரிட்ட பழங்குடி இனத்தவர்களை கெல்டிக் என்று காட்டுமிராண்டிகள் என இழிவாக அழைத்தைப் போன்றே வடயிந்தியரின் ஆக்கிரமிப்பின் போது அவர்களுக்கு பெரும் சவலாக எதிர்த்து போரிட்ட திராவிட பழங்குடியினர்களை "அரக்கர்" என தரம் தாழ்த்தி அழைத்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

அரக்கர்களை சித்தரிக்கும் நாடகம், தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகளும் சிலவிடங்களில் நடத்தப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.