யட்ச நாடு

யட்ச நாடு (Yaksha Kingdom), புராண, இதிகாசங்கள் குறிப்பிடும் யட்சர்கள் என்ற உயர் மனித சக்தி படைத்த மனித இனத்தவர்கள் வாழும் நாடாகும். யட்சர்கள் பண்டைய பரத கண்டத்திலும், இலங்கையிலும் வாழ்ந்தனர். யட்ச இனத்தவர்கள் அசுரர்களுடன் தொடர்புடையவர்கள்.

கி பி 1 - 2-வது நூற்றாண்டின் யட்ச ஓவியம், மதுரா அருங்காட்சியகம்
யட்சன்

யட்சர்களின் மன்னரான குபேரனும், அசுர குல மன்னர் இராவணனும்,  விஸ்ரவ முனிவரின் இரு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். குபேரன் பெருஞ்செல்வங்களுடன் யட்ச நாட்டையும்; இராவணன் இலங்கை நாட்டையும் ஆண்டனர்.

மகாபாரதக் குறிப்புகள்

யட்சர்களின் நிலப்பரப்புகள்

திபெத் பகுதியில் உள்ள கயிலை மலை சுற்றியுள்ள பகுதிகளே யட்சர்களின் உறைவிடங்கள் என புராணங்களும்; இதிகாசங்களும் கூறுகிறது. மேலும் அனைத்து புனித நீர் நிலைகளிலும், காடுகளிலும், குகைகளிலும் வாழ்பவர்கள் என புராணங்களும், இதிகாசங்களும் கூறுகிறது.

யட்சர்களின் மன்னன் குபேரன்

நர்மதை ஆற்றாங்கரைப் பகுதியில்  விஸ்ரவ முனிவருக்கு பிறந்தவர் குபேரன். இலங்கையில் தங்க கோட்டைகளுடன் கூடிய அழகான நகரத்தை அமைத்து, புஷ்பக விமானத்தில் பயணித்து இலங்கையை ஆட்சி செய்து வருகையில், தனது ஒன்று விட்ட தம்பியான இராவணனால் இலங்கையை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார்.

ஸ்தூணாகர்ணன்

பாஞ்சால நாட்டின் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஸ்தூணாகர்ணன் எனும் யட்சன், துருபதன் மகள் சிகண்டினிக்கு, தனது ஆண் உருவத்தை வழங்கி, சிகண்டினியின் பெண் உருவத்தை தான் பெற்றுக் கொண்டார்.[1]

யட்சப் பிரச்சனம்

மகாபாரத வன பருவத்தில், ஒரு யட்சன் கொக்கு வடிவத்தில் தடாகத்தில் நின்று கொண்டு, தருமனிடம் கேள்விகள் கேட்டு உரிய பதிலைப் பெற்றான். இதனை யட்சப் பிரச்சனம் என்பர். இது மகாபாரதத்தில் சிறப்பான பகுதிகளில் ஒன்றாகும். [2] [3].[4]

பிற குறிப்புகள்

  • காடுகளிலும், மலைகளிலும் துணையின்றி செல்லும் பயணிகள் குபேரன், மணிபத்திரன் போன்ற யட்ச மன்னர்களை மனதில் வணங்கிக் கொண்டே பயணிப்பர்.[5]
  • குபேரனின் படைகளில் கந்தர்வர்களும் உள்ளனர்.
  • அசுரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள் கிண்ணரர்கள், கிம்புருசர்கள் போன்று யட்சர்களும் மலைகளிலும், காடுகளிலும், நீர் நிலைகளிலும் பயணிக்கக் கூடியவர்கள் [6]

யட்சர்கள் போன்று உயர் சக்தி கொண்ட இனத்தவர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.