கந்தர்வர்
கந்தர்வர்கள் என்போர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பதினான்கு கணங்களில் ஒரு இனக்குழுவாவர்.
இவர்கள் கந்தவர் லோகத்தில் வசிக்கின்றார்கள்.
இவர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள்.[1] இவர்கள் எப்பொழுதும் மகிழ்வாக பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்தரம், நடனம், இசை போன்ற கலைகள் கந்தர்வ வேதம் என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும்.[2] அரம்பையர்கள், கந்தவர்களுடன் ஆடல் பாடல்களில் ஈடுபடுவர்.
காண்க
ஆதாரம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.