தக்கன்

தட்சன் பிரஜாபதிகளில் ஒருவர். இவர் பிரம்மாவின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் பிரசுதி. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயினி, ரோகிணி, ரேவதி மற்றும் கார்த்திகை,கியாதி உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி இன்னும் பல பேர்.

தக்கன்
வீரபத்திரர் அருகே ஆட்டு தலையுடன் இருக்கும் தட்சன்
தேவநாகரிदक्ष
துணைபிரசுதி,
குழந்தைகள்அதிதி, திதி, சதி, சுவாகா, சுவேதா, ரோகிணி, இரேவதி

இதில் தாட்சாயினி இவரின் விருப்பத்திற்கு மாறாக சிவனை திருமணம் செய்துகொண்டமையால், தட்சன் செய்த மகா வேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அது மட்டுமன்றி சிவனுக்கு கொடுக்கவேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். இதன் விளைவாக சிவனால் ஏவப்பட்ட வீரபத்திரனும், தேவியால் அனுப்பப்பட்ட பத்ரகாளியும் யாகசாலையை அழித்து தட்சனையும் கொன்றனர். மற்ற மகள்களான 27 நட்சத்திரங்களும் சந்திரனை மணந்தனர். ரதி, மன்மதனை மணந்தார்.

தட்சப் பிரசாபதி மகள்களின் வம்சாவளியினர்

தக்கனுக்குப் பிறந்த அறுபது பெண்களில், தாட்சாயினியை சிவபெருமானுக்கும், பத்துப் பேரைத் எமதருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், ரதியை மன்மதனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீரஸர், கிரிசஷ்வர் ஆகிய முனிவர்களுக்கு மணம் செய்வித்தான்.

எமதர்மனுக்கு மணம் செய்வித்த பத்து மகள்களில் அருந்ததியின் மக்கள் உலகில் சிறப்பு பெற்றவர்கள்.

வாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான்.

பிரபசாவின் மகன் தேவலோக சிற்பி விசுவகர்மா.

சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள்.

விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள்.

சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள்.

அதிதி-காசிபர் தம்பதியரின் மக்கள் ஆதித்தர்கள் ஆவர்.

திதி -காசிபர் தம்பதியரின் மக்கள் இரணியன், இரணியகசிபு தைத்தியர்கள் போன்ற தைத்தியர்கள்.

தனுவின் புத்திரர்கள் தானவர்கள்.

அரிஷ்டாவின் புத்திரர்கள் கந்தர்வர்கள்.

காசாவின் மக்கள் யட்சினிகள் மற்றும் யட்சர்கள்.

சுரசையின் மக்கள் பசுக்கள், எருமைகள்

வினிதாவின் மக்கள் அருணன் மற்றும் கருடன்.

தாம்ராவின் ஆறு பெண் மக்களிடமிருந்து ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள்.

குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்புகள் தோன்றின.

இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின.

கத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தட்சகன், நஹுசன், ஆதிசேஷன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

முனிக்கு அரம்பையர்கள் பிறந்தனர்.

தட்சன் செய்த மகாயாகம் கேரளா மாநிலம் கண்ணூரில், கோட்டியூர் எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.