சந்திர தேவன்

சந்திரன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் ஒருவராவார். இவருக்கு சோமன் என்ற பெயரும் உண்டு.

சந்திர தேவன்
தேவநாகரிचन्द्र
சமசுகிருதம்Chandra
வகைதேலன், நவக்கிரகம்
இடம்சந்திரலோகம்
கிரகம்திங்கள்
மந்திரம்ஓம் சந்திராய நமக

வானில் நட்சத்திரங்களாக வலம் வருகின்ற தட்சனின் 27 மகள்களும் சந்திரன் மேல் காதல் கொண்டார்கள். சந்திரனை அடினமயாய் அடையும் பொருட்டு பிரம்மா தவம் செய்வித்தார். இருப்பினும் இவர்களில் மிகவும் அழகான ரோகினியுடன் மட்டும் சந்திரன் காலம் கழித்தார். அதனால் தங்கள் தந்தையிடம் நட்சத்திர பெண்கள் புகார் தெரிவித்தனர்.

தனது மகள்களை சமமாக நடத்தாதமையினால் சந்திரன் அழகு நாளொன்றுக்கு ஒன்று என அழிந்து மறைந்து போகும்படி தட்சன் சாபமிட்டார்.

பதினான்கு அழகுகளையும் இழந்த சந்திரன் மீதமிருக்கும் அழகினை காப்பாற்ற சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.