மந்திரம் (இந்து சமயம்)

மந்திரம் என்ற சொல் பல பொருள்களில் வழங்குகிறது. ஒரு பொருள் சில ஒலிப்பண்புகளுடன் கூடிய சொல், அல்லது சொற் தொடர்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒலிப்பதன் மூலம் ஒருவருடைய கவனத்தை குவியப்படுத்தலாம் என்பது. இதுவே தற்காலத்தில் தரப்படும் பொருள்.


இந்து சமய
கருத்துருக்கள்
பிரம்மம்
ஆத்மா
மாயை
கர்மா
ஆசை
துக்கம்
பிறவிச்சுழற்சி
மறுபிறவி
தர்மம்
மோட்சம், வீடுபேறு
அவதாரக் கோட்பாடு
லீலை
நரகம்
சொர்க்கம்
மந்திரம்
தாந்திரீகம்
தவம்
இந்து சமய
சடங்குகள்
பூசை
யாகம்
பலி கொடுத்தல்
அர்ச்சனை
ஓதுதல்
விரதம்
தியானம்
தவம்
ஜெபம்

சுருதிகளான வேத செய்யுட்களை மட்டும் மந்திரம் என்பர். ஸ்மிருதி நூல்களான பகவத் கீதை மற்றும் இதிகாசங்கள் போன்ற நூல்களில் காணப்படும் செய்யுட்களை சுலோகங்கள் என்பர். சுருதிகளில் உள்ள மந்திரங்களையும், ஸ்மிருதிகளில் உள்ள சுலோகங்களை ஒரு குறிப்பிட்ட ஒலி அளவுடன் ஓதப்படும் முறைக்கு வேத சந்தஸ்கள்என்பர்.

தொன்மவியல்களில் மந்திரம் என்பது மீவியற்கை சக்தியை வழங்ககூடிய சொற்தொடர்களைக் குறிக்கிறது. இதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.

  • பிரணவ-மந்திரம் ஓம்
  • பஞ்சாச்சரம் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய (நமச்சிவாய) சிவ-மந்திரம்
  • சடாச்சரம் ஆறெழுத்து மந்திரம் சரவணபவ முருகன்-மந்திரம்
  • அட்டாச்சரம் எட்டெழுத்து மந்திரம் ஓம் நமோ நாராயணாய நாராயண-மந்திரம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.