தேவநாகரி

தேவநாகரி (Devanagari) (देवनागरी) என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு அரமேய மொழி அரிச்சுவடி போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி.மு 2600 ஆண்டுகள் வரையாவது பழமையான சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. பிராமிக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன.

தேவநாகரி
வகை அபுகிடா
மொழிகள் பல் இந்தோ ஆரிய மொழிகள், இந்தி, மராத்தி, சாந்தாலி, சமஸ்கிருதம், காஷ்மீரி
காலக்கட்டம் ~1200 கி.பி முதல் இன்றுவரை
மூல முறைகள் பிராமி
  குப்தர்
   சித்தம்
    தேவநாகரி
தோற்றுவித்த முறைகள் குஜராத்தி
நெருக்கமான முறைகள் கிழக்கு நாகரி
ஐஎஸ்ஓ 15924 Deva

முன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தேவநாகரி முறையில் எழுதப்பட்ட ரிக் வேத நூல்

தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும்.

தேவநாகரி இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் சொற்கள், மேற்கோடு முறியாமல் இடைவெளியின்றி எழுதப்படுகின்றன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. நவீன மொழிகளில் சொற்கள் தனித்தனியாக எழுதப்படுகின்றன. தேவநாகரியில் ஆங்கிலத்திலிருப்பது போல் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடுகள் கிடையாது.

சமஸ்கிருத எழுத்துக்கூட்டல் ஒலிப்பியல் முறை ஆனாலும் வரலாற்று மாற்றங்களினால் தேவநாகரியிலெழுதப்படும் நவீன மொழிகள் ஓரளவு மட்டுமே ஒலிப்பியல் முறைமையைக் கொண்டுள்ளது. அதாவது தேவநாகரியில் எழுதப்படும் சொற்கள் ஒரு வழியாக மட்டுமே உச்சரிக்கப்படமுடியுமாயினும், எல்லா உச்சரிப்புக்களையும் அச்சொட்டாக எழுத முடியாது. தேவநாகரி 34 மெய்யெழுத்துக்களையும் (வியஞ்சன்), 12 உயிரெழுத்துக்களையும் (ஸ்வர்) கொண்டுள்ளது.

பின்வரும் அட்டவணைகளிலுள்ள transliterations பிரபல கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் முறையைப் பின்பற்றியுள்ளது. ITRANS குறியீடு தேவநாகரியை ஆங்கிலத்துக்கு மாற்றுவதற்கான ஒரு lossless transliteration முறையாகும். இது Usenet இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ITRANS முறையில் தேவநாகரி என்னும் சொல் "devanaagarii" என எழுதப்படும்.

தேவநாகரியின் குறியீடுகள்

குறிப்பு: இப்பக்கத்தில் தேவநாகரி எழுத்துக்களைக் காண்பதற்கு, யுனிகோடு support மற்றும் தேவநாகரி எழுத்துக்களைக் கொண்ட fonts என்பன தேவை. fontsகளை இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

தேவநாகரியின் எல்லா உயிர்க் குறிகளும் மெய்யெழுத்துக்களுக்கு மேல் அல்லது கீழ்ப் பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன. "இ" உயிர் மட்டும் மெய்யெழுத்துக்கு வலப்பக்கம் சேர்க்கப்படும். "தேவநாகரி உயிரெழுத்துக்கள்" அட்டவணையில் "எழுத்துக்கள்" நிரலில் மெய்யெழுத்துச் சேர்க்கையின்றி வரும் உயிரெழுத்துக் குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. "உயிர்க் குறியீடு" நிரல், உயிர் மெய்யெழுத்துக்களுடன் சேரும்போது பயன்படும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. "'ப' உடன் உயிர்" நிரலில் "ப்" மெய்யுடன் உயிரொலிகள் சேரும்போது வரும் குறியீடுகள் உதாரணமாகத் தரப்பட்டுள்ளன. "யுனிகோடு பெயர்" நிரல், உயிரொலிகளுக்கான யுனிகோடு specification இல் காணப்படும் பெயர்களைக் காட்டுகின்றது. "IPA" நிரல் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி முறையில் தேவநாகரி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகளைத் தருகின்றது.

தேவநாகரி உயிரெழுத்துக்கள்
எழுத்துஉயிர்க் குறியீடு[ப] உடன் உயிர்யுனிகோடு பெயர்IPA
(pa)Aə
पा(pā)AAɑ
ि पि(pi)Iɪ
पी(pī)IIi
पु(pu)Uʊ
पू(pū)UUu
पृ(pṛ)VOCALIC Rri
पॄVOCALIC RR
पॢVOCALIC L
पॣVOCALIC LL
पॅCANDRA E
पॆSHORT E
पे(pe)Ee
पै(pai)AIɛ
पॉCANDRA O
पॊSHORT O
पो(po)Oo
पौ(pau)AUɔ
Other modifier symbols
SymbolSymbol with [p]Unicode nameFunction
प्VIRAMACalled halant; suppresses the inherent vowel.
पँCANDRABINDUNasalizes vowel
पंANUSVARANasalizes vowel
पःVISARGAAdds voiceless breath after vowel
प़NUKTAUsed to indicate sounds borrowed from Persian (e.g., ph + nukta = f)
पऽAVAGRAHA

When no vowel is written, 'a' is assumed. To specifically denote the absence of a vowel, a halant (also called virama) is used.

Devanagari consonants
LetterUnicode nameTransliterationIPA
KAkk
KHAkhkh
GAgg
GHAghgɦ
NGAŋ
CAc
CHAchh
JAj
JHAjhɦ
NYAñɲ
TTAʈ
TTHAṭhʈh
DDAɖ / ɽ
DDHAḍhɖɦ / ɽɦ
NNAɳ
TAt
THAthh
DAd
DHAdhɦ
NAn
PApp
PHAphph
BAbb
BHAbhbɦ
MAmm
YAyj
RArɾ
LAll
LLAɭ
VAvv
SHAśɕ
SSAʂ
SAss
HAhh

Among these, ळ is not used in Hindi. The entire set is used in Marathi.

Devanagari digits are written as follows:

Devanagari numerals
0 1 2 3 4
5 6 7 8 9

யுனிக்கோடில் தேவநாகரி

தேவநாகரியின் யுனிக்கோடு எல்லை U+0900 .. U+097F.

  0123456789ABCDEF
900 
910 
920 
930 ि
940 
950 क़ख़ग़ज़ड़ढ़फ़य़
960 
970 ॿ

தேவநாகரி தட்டச்சுப் பலகை

INSCRIPT

Software

  • Apple Type Services for Unicode Imaging – Macintosh (new)
  • Graphite – open source (SIL)
  • Pango – open source (Gnome)
  • Uniscribe – Windows
  • WorldScript – Macintosh (old)

வெளியிணைப்புகள்

இலத்திரனியல் மூலங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.