கபிலா

இந்து தொன்மவியலில் கபிலர் வேதக்கால மகரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் மனு வம்சத்தில் தோன்றியவர், பிரம்மாவின் பேரனாகவும், விட்ணுவின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.

கபிலர்
கபிலர், வேதகால முனிவர்
தலைப்புகள்/விருதுகள்மனுவின் வழித்தோன்றல்.
தத்துவம்சாங்கியம்

சாங்கியம் எனும் தத்துவத்தை ஆக்கியவர். இவரது சாங்கிய தத்துவத்தைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் உலகப்படைப்பு தத்துவத்திற்கு கையாண்டுள்ளார்.

சாங்கிய தத்துவத்தை நிறுவியவர் கபிலர். வேதகாலத்திற்குப் பின் சாங்கிய தத்துவத்தை நிலைநாட்டியவர். சாங்கிய தத்துவம், இந்தியத் தரிசனங்களுள் பிரதானமானது; கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. பிரகிருதி, புருடன் ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பௌத்த மதத்தில் கபிலரின் சாங்கிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.

இவர் பரமாத்மாவின் அவதாரம் எனக் கருதப்படுபவர் ஆவார். இவரது பிறப்பு மேம்பட்ட பிறப்பாக ஸ்ரீமத்பாகவதத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • இந்தியத் தத்துவ இயல், ஒரு எளிய அறிமுகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.