புரி தேரோட்டம்

புரி ரத யாத்திரை (Ratha Yatra, (ஒரிய மொழி: ରଥଯାତ୍ରା) என்பது இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.

ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.[1][2] தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார்.

முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

ரத யாத்திரை படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.