குளிகன்

குளிகன்[1] என்பவர் இந்து சமய தொன்மவியலின் அடிப்படையில் குளிகை என்ற காலத்தின் அதிபதியாவார். இவர் சனீசுவரன் - தவ்வை தம்பதிளின் மகனாவார். இவரை மாந்தி[2] என்றும், மாந்தன் என்றும் அழைக்கின்றனர். எருமைத் தலையும் மனித உடலும் கொண்டவராக இருக்கிறார். பல்லவர்கள் காலத்தில் தவ்வையை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. அவர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட, புதிதாக கட்டப்பட்ட கோயில்களில் தவ்வை சிலையுடன் மாந்தனையும் வைத்து வழிபாடு செய்துள்ளனர். பெரும்பாலும் தன்னுடைய தாயான தவ்வை மற்றும் சகோதரி மாதி அவர்களுடன் ஒரே கல்லினால் ஆன சிலையில் உள்ளார். தற்போது இவரை வழிபடும் வழமை குறைந்து காணப்படுகிறது.

குளிகன் சிற்பம், மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் பிரகாரத்தில்

குளிகனின் குணம்

குளிகை காலத்தில் செய்யப்படுகிற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது இந்து சமய மக்களின் நம்பிக்கையாகும். அதனால் நற்காரியங்களையும், சுபகாரியங்களையும் மட்டுமே இந்தக் காலத்தில் செய்கின்றார்கள்.


குளிகை காலம்

குளிகனுக்கு உகந்த காலமான குளிகை காலத்தினை இந்து சமய சோதிடம் வரையறை செய்துள்ளது. இதன்படி பகல் மற்றும் இரவு என இருவேளைகளிலும் குளிகை காலம் வருகிறது.

கிழமைகள்பகல் பொழுதுஇரவுப் பொழுது
ஞாயிறு03.00 - 04.3009.00 - 10.30
திங்கள்01.30 - 03.0007.30 - 09.00
செவ்வாய்12.00 - 01.3012.00 - 01.30
புதன்10.30 - 12.0003.00 - 04.30
வியாழன்09.00 - 10.3001.30 - 03.00
வெள்ளி07.30 - 09.0012.00 - 01.30
சனி06.00 - 07.3010.30 - 12.00

குளிகன் வழிபாடு

குளிகனை சனிக்கிழமைகளில் வணங்கலாம். சனீசுவரனை வணங்கும் போது குளிகனை சேர்த்து வணங்கலாம். [3]

காயத்திரி மந்திரம்

மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத்

பீஜாட்சர மந்திரம்

கும் குளிகாயநம

நவநாகம்

குளிகன் என்பவர் நவநாகங்களில் ஒருவராவார். இவர் மாந்தி என்றும் அறியப்படுகிறார். இவர் காசிபர்-கத்ரு தம்பதியரின் ஒன்பது மகன்களில் ஒருவர்[4] என்றும், சனிபகவானுடைய மகன் [5]என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.


மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. https://web.archive.org/web/20160930180913/http://www.dinamalar.com/m/temple_detail.php?id=21476
  2. https://web.archive.org/web/20160930180913/http://www.dinamalar.com/m/temple_detail.php?id=21476
  3. https://web.archive.org/web/20160930180913/http://www.dinamalar.com/m/temple_detail.php?id=21476
  4. காசிபன் மனைவிய ரில்மிக்கான கத்துரு
    வயிற் றுதித்த கட்செவிகளைப்
    பேசிடில் பேரனந்தன் வாசுகி பிலத்த
    தக்கன் கார்கோடன் பற்பன்
    மகாபற்பன் சங்கு பாலன் குளிகன் இம்
    மாநாகம் எட்டுப் பேர்தானாதியிதில்
  5. http://www.ammandharsanam.com/magazine/March2012unicode/page002.php சனி தோச நிவர்த்தி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.