இந்திரன் (இந்து சமயம்)

இந்திரன் (ஒலிப்பு ) (தேவேந்திரன் [1]) என்பவர் இந்து தொன்மவியல் அடிப்படையில் தேவ உலகத்தின் அரசனாவார். இவருடைய மனைவி இந்திராணி. இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர்.

இந்திரன்
ஐராவதம் வாகனத்தில் இந்திரன்
அதிபதிதேவர்களின்
தேவநாகரிइन्द्र
சமசுகிருதம்Indra
இடம்தேவ லோகம்
ஆயுதம்வஜ்ஜிராயுதம்
துணைஇந்திராணி

ரிக் வேதத்தில்

இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவர் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் வஜ்ஜிராயுதத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவன். யாகங்களில் படைக்கப்படும் ஹவிஸை (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான்.

புராணங்களில்

தொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவன் நிலை தாழ்ந்துவிட்டது.ஆரியர்களால் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் ஆரம்ப காலம் (கி.மு 6ஆம் நூற்றாண்டு) தொட்டே இந்திரன் பற்றிய இழிவான பேச்சுகள் தொடங்கிவிட்டது என்பதே உண்மை. வியாசரால் எழுதப்பட்ட ஜெயம் (கி.மு 5 ஆம் நூற்றாண்டு) எனப்படும் மகாபாரதத்திலும், புராணங்களிலும் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே தெரியவருகிறது. வேதங்களில்கூட மூன்று இந்திரர்கள் உள்ளனர். அவர்களுள் இரண்டு இந்திரர்கள் இந்தியத்தமிழர்கள்; ஒருவர் கிருஷ்ணர் எனப்பட்ட கரவேல், மற்றொருவர் திருமால் எனப்பட்ட செம்பியன் கரிகால்சோழன். முதல் இந்திரனே அந்நிய நாட்டவன். இவனுக்கும் ஒரு இந்தியத் தமிழ்ப்பெண்ணுக்கும் பிறந்தவனாலேயே இந்த அந்நிய இந்திரன் அடக்கி ஒடுக்கப்பட்டான். அப்படி அடக்கி ஒடுக்கியவனே செவ்வாய் எனப்பட்ட செங்குட்டுவன்.

பின் குறிப்பு:- இந்த ஆரியர் -தமிழர் பாகுபாடு மிகுந்த நகைப்பை வரவழைக்கும். தமிழ்சித்தர் போகர் அருளிய 'ஜெனன சாகரம்' என்ற நூலைப் படித்திருந்தால் இது புலப்படும். 'ஆதியில் நந்தியாகி, அயனும் மாலுமாகி, பிறகு இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணன், நபி என்று ஜெனனம் எடுத்தபின் இன்று போகராக இருக்கிறேன்' (பா.324) என்கிறார். அப்படி என்றால் தேவேந்திரனான போகர் ஆரியரா? புராணங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறொரு பாத்திரத்தை ஏற்கும். இதை ஈசன் தான் முடிவு செய்கிறார் என்று போகர் குறிப்பிடுகிறார்.


இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.[2]

இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது.[3] இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது.[4] தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் என'க் [5] குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.

இவற்றை பார்க்கவும்

ஆதாரம்

  1. http://www.tamilபற்றி)0/l4120son.jsp?subid=1736
  2. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041333.htm இந்திர விழா
  3. சின்னமனூர் செப்பேடுகள்
  4. ஐங்குறுநூறு 62
  5. . (மணிமேகலை. 1: 65-72.)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.