புட்பக விமானம்

புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும். இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.

இங்கு படகாகத் தீட்டப்பட்டுள்ளது இராமன் அயோத்திக்கு மீண்டு வந்த புட்பக விமானமேயாம்.


இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.

இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

ஆதாரங்கள்

  1. அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக, இனிய சிந்தனை இராகவன் உவகையோடு கம்பராமாயணம் மீட்சிப் படலம்- பாடல் - 10096
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.