இராம நவமி

இராம நவமி (தேவநகரி: राम नवमी) கோசலை நாட்டை அதன் தலைநகராகிய அயோத்தியிலிருந்து ஆட்சி செய்த தசரதச் சக்கரவத்தியின் மூத்த மகன் இராமன் ஆவார். இவர் விஷ்ணு [1][2][3] பகவானின் அவதாரமாக இந்துக்களால் நம்பி வழிபடப்படுகிறார். இத்தகைய தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து சமய விழாவே இராமநவமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ இராம நவமி என்றும் வழங்கப்படுகிறது. இவ்விழா 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது. அதனால் இது சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

இராம நவமி
ராமர் (நடு), சீதை (வலது), இலட்சுமணன் (இடது) மற்றும் அனுமான் (இடது கீழ்).
பிற பெயர்(கள்)ஸ்ரீ ராம நவமி
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைராமரின் பிறந்தநாள்; ராமர் மற்றும் சீதையின் கல்யாண தினம்
கொண்டாட்டங்கள்1 - 9 நாட்கள்
அனுசரிப்புகள்பூசைக்கள், விரதம், விருந்து
தொடக்கம்சித்திரை நவமி; சித்திரை மாதத்தின் 9ம் நாள்
தொடர்புடையனஇராமர், சீதை

சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்தக் காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது [4][5].

இராமராஜ்யம்

இராமரின் வழிகாட்டலில் நடைபெறும் ஆட்சியான இராமராஜ்யம் அமைதி மற்றும் செழிப்புடன் கூடிய காலகட்டமாக இருந்தது. மகாத்மா காந்தியும் கூட அவரைப் பொறுத்தவரை சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிப்பதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.

இராம நவமி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருகிறது. அதிகாலையில் சூரியனைத் தொழுவதுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கின்றன. மதியத்தில் இராமபிரான் பிறந்த நேரத்தின் போது சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வட இந்தியாவில் இராம நவமி ஊர்வலம் மிகவும் பிரபலமான நிகழ்வாக இருக்கிறது. இந்த ஊர்வலத்தில் முக்கிய ஈர்ப்பாக இராமர், அவரது சகோதரர் லட்சுமனன், அவரது ராணி சீதா மற்றும் அவரது சீடர் ஹனுமன் ஆகிய நால்வர் போன்று வேடமிட்ட நபர்கள் மகிழ்வுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வருவார்கள். அந்தத் தேரில் பல்வேறு மற்ற நபர்கள் இராமரின் படை வீரர்களாக பழங்கால உடைகளில் வேடமிட்டு இடம்பெற்றிருப்பார்கள். அந்த ஊர்வலத்தில் பங்கு பெறுபவர்கள் இராமரின் ஆட்சி காலத்தின் மகிழ்ச்சியான நாட்களைப் பிரதிபலிக்கும் விதமாக மிகுந்த கொக்கரிப்பை வெளிப்படுத்திவருவார்கள்.

குறிப்புதவிகள் மற்றும் குறிப்புகள்

  1. இராம நவமி பிபிசி .
  2. Gupte, B.A. (1919). Hindu Holidays and Ceremonials.
  3. நவராத்திரியின் ஒன்பது நாள் பண்டிகையில், இராம நவமியில் பக்தர்களின் பஜனைகள், கீர்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகள் முக்கிய பங்குவகிக்கின்றன இந்தியன் எக்ஸ்பிரஸ் , வெள்ளி, மார்ச் 31, 2006.
  4. ஸ்ரீ இராம நவமி இந்து மற்றும் முகமதியப் பண்டிகைகள் , ஜான் மர்டோக்கால். ஏசியன் எஜுகேசனல் சர்வீசசால் வெளியிடப்பட்டது, 1991. ISBN 8120607082. பக்கம் 27.
  5. இராம நவமி
  6. இராமநவமி இந்திய அரசின் போர்ட்டல்.
  7. இராமநவமி த டைம்ஸ் ஆஃப் இந்தியா , ஏப்ரல் 2, 2009.
  8. பத்ராச்சலத்தில் வான் உலகத் திருமண மகிழ்ச்சி த இந்து , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.
  9. சீதாஇராம கல்யாணத்தின் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் த இந்து , சனிக்கிழமை, ஏப்ரல் 08, 2006.
  10. http://www.bhadrachalarama.org/
  11. Zaidman, N. (2000). "The Integration of Indian Immigrants to Temples Run by North Americans". Social Compass 47 (2): 205. doi:10.1177/003776800047002005. http://scp.sagepub.com/cgi/content/abstract/47/2/205. பார்த்த நாள்: 2008-06-01. "Another example of a religious enterprise initiated by a board member was the organization of Lord Ramachandra Appearance Day (Sri Ram Navami).".
  12. இராம நவமியில், நாம் சிறந்ததற்கான நமது அன்பை நாம் கொண்டாடுகிறோம் இந்தியன் எக்ஸ்பிரஸ் , திங்கள்கிழமை, மார்ச் 31, 2003.
  13. இராம நவமிக்கு முன் தினத்தில் ஷோபா யாத்திரை இந்தியன் எக்ஸ்பிரஸ் , வியாழக்கிழமை, மார்ச் 25, 1999.
  14. அயோத்தியில், இராம நவமி கொண்டாட்டங்களுக்கு இடையில் மத நல்லிணக்கம் இந்தியன் எக்ஸ்பிரஸ் , ஏப்ரல் 15, 2008.
  15. இராம நவமி தென்னிந்திய இந்துப் பண்டிகைகள் மற்றும் வழக்கங்கள் , மைதிலி ஜகன்னாதனால். அபினவ் பப்ளிகேசன்ஸ் வெளியீடு, 2005. ISBN 8170174155. பக்கம் 82.
  16. இராம நவமி
  17. Bala Kanda, Chapter 18, Verse 8, 9, 10 Text
  18. த சன்டே ட்ரிபூன் - ஸ்பெக்ட்ரம் - முன்னணிக் கட்டுரை
  19. 'இராமபிரான் கிமு 5114 இல் பிறந்தார்'-இந்தியா-த டைம்ஸ் ஆஃப் இந்தியா

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.